| |
| "எனக்கு.....அருளே" என்று - நின்று உணர்வார்துணிந்த நிலை; எனக்கு இது நிகழ்ந்தது - இது - கல்எறிந்த இவ்வொவ்வாத செயல்; எனக்கு - சிவலிங்கத்தினைக் கண்டு வழிபட்டு உய்ய எண்ணிய எனக்கு; நிகழ்ந்தது - ஒவ்வாச் செயல் நான் நினையாமலே செய்ய நேர்ந்தநிலை; அவர் - "பொருள் சிவன்"என் றருளாலே உணர்ந்தறிந்த (3640) அப்பெருமான் என முன்னறிசுட்டு; அருளே - ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம்; என்று - என்று உணர்ந்து தெளிந்து துணிந்து. |
| அதுவே தொண்டாக என்றும் அதுசெய - அதனைத் தொண்டாக மேற்கொண்டு இனி வருநாள் எல்லாம் அதனையே செய்ய; அதுவே தொண்டாக - தொண்டுக்கு மாறுபட்ட அதனையே தொண்டாகக்கொண்டு; ஏகாரம் தேற்றம்; அது - அதனையே; இரண்டனுருபும் பிரிநிலை யேகாரமும் தொக்கன. அதுவே தொண்டாக ஆகும் நிலையின் தன்மையினை மேல்வரும் மூன்று பாட்டுக்களினால் விரித்துக் கூறுகின்றார். |
| நினைந்தார் - துணிந்தார்; இதனை அருளே நிகழ்வித்தமையால் இதனையே அவரது அருளாணையாம்; ஆதலின் அவ்வாணையின்வழி நிற்பேன் என்பது துணிந்தனர். |
| அதுவே தொண்டாக என்றும் செய - என்க. |
| |
| 11 |
3647 | தொடங்கியநா ளருளியவத் தொழிலொழியா வழிதொடருங் கடன்புரிவா ரதுகண்டு கல்லெறிவார் துவராடைப் படம்புனைவே டந்தவிரார்; பசுபதியார் தஞ்செயலே அடங்கலுமென் பதுதெளிந்தா ராதலின் மாதவர்தாம்; | |
| 12 |
3648 | இந்நியதி பரிவோடு வழுவாம லிவர்செய்ய முன்னுதிருத் தொண்டாகி முடிந்தபடி தான்மொழியிற் றுன்னியமெய் யன்புடனே யெழுந்தவினை தூயவர்க்கு மன்னுமிகு பூசனையா மன்புநெறி வழக்கினால். | |
| 13 |
| 3647. (இ-ள்) தொடங்கிய நாள்......கடன் புரிவார் - தொடங்கிய நாளில் இறைவர் அருளிய அத்தொழில் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமைப் பாட்டினை எண்ணுவாராய்; அது கண்டு கல்எறிவார் - அதனைக் கண்டு கல்லினை எறிவாராகி; துவராடைப் படம்புனை வேடம் தவிரார் - துவராடையாகிய உடையினைப் புனையும் புத்தர் வேடத்தினையும் விடாது மேற்கொள்வார்; மாதவர்தாம் - பெருந்தவமுடைய நாயனார்; பசுபதியார்....ஆகலினால் - பசுபதியாராகிய சிவபெருமானுடைய அருட்செயலே எல்லாம் ஆகும் என்ற உண்மையினைத் தெளிந்துணர்ந்தாராதலினாலே; |
| 12 |
| 3648. (இ-ள்) இந்நியதி....செய்ய - இந்த நியதியாகிய தமது நியமச் செயலை மிக்க அன்புடனே இவர் செய்துவர; முன்னும்....மொழியில் - (அச்செயல்) எண்ணப்படுகின்ற திறத்தொண்டேயாகி முடிந்த அத்தன்மையினைச் சொல்வோமானால்; அன்புநெறி வழக்கினா - அன்பினில் எழுந்த நெறியின் நியாயத்தினாலே; துன்னிய....பூசனையாம் - பொருந்திய மெய்யன்பு காரணமாகத் தொடங்கி அதுவே யாறாகச் செய்த செயல் தூயவராகிய சிவபெருமானுக்கு நிலைபெற்ற சிறப்பு மிக்க பூசனையே யாகும். |
| 13 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்த ஒருமுடிபு கொண்டன. |
| 3647. (வி-ரை) தொடங்கிய நாள் - வழிபடத்தொடங்கிய முதல் நாளில், |