| |
| வந்ததொரு செயலாலே (தொண்டர்) கண்டு - அவர் அருளால் எழுந்தருளி வராவிடிற் காணுதற் கரியார் என்பது செயலாலே - செயல் தந்த காணக் காட்டுதலாலே - என்றதனால் காண்க. |
| அருள் நோக்கு - சிவப்பேறு தரும் பார்வை. |
| மிக்க சிவலோகத்திற் பழ அடிமைப் பாங்கு - மிக்க - ஏனை எல்லாப் பதங்களினும் மிகுந்த சிறப்புடைய; மீளாத; பழ அடிமைப் பாங்கு - "பழ அடியார் கூட்டம் அத்தா காண ஆசைப் பட்டேன்" (திருவா); "தம்மைவிடுத் தாயும் பழய வடியாருடன் கூட்டித், தோயும் பரபோகந் துய்ப்பித்து" (கந்தர் கலிவெண்பா); பாங்கு - பண்பு நிலை; உரிமை; எழுந்தருளுதல் - தம் நிலையில் மறைதல் |
| 17 |
| |
| வேறு |
3653 | ஆதியார் தம்மை நாளுங் கல்லெறிந் தணுகப் பெற்ற கோதில்சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை யவர்க்கு நல்குஞ் சோதியா ரறித லன்றித் துணிவதென்? னவர்தாள் சூடித் தீதினை நீக்க லுற்றேன் சிறப்புலி யாரைச் செப்பி. | |
| 18 |
| (இ-ள்) ஆதியார் தம்மை....குறிப்பினை- நாள்தோறும் கல்எறிந்து ஆதி முதல்வனாகிய சிவபெருமானை அணுகப்பெற்ற குற்றமில்லையாகிய சிறப்புடைய தொண்டராம் சாக்கிய நாயனார் உட்கொண்டு வழிபட்ட குறிப்பினை; அவர்க்கு....அறிதலன்றி - அவருக்கு அருள் செய்யும் சோதியா ராகிய சிவபெருமான் அறிதலன்றி நாம் துணிவது எவ்வாறு?; அவர் தாள்சூடி....செப்பி - அவர் திருவடிகளைச் சிரமேல் வைத்துக்கொண்டு அத்துணைகொண்டு சிறப்புலியாரது சரிதம் கூறப்புகுந்து தீமையை நீக்கலுற்றேன். |
| (வி-ரை) இது கவிக்கூற்று. |
| இதுவரை கூறிவந்த சரிதத்தை வடித்து எடுத்துக் காட்டி முடிபு கூறி இனி வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார் ஆசிரியர். |
| நாளுங் கல் எறிந்து - ஆதியார் தம்மை - அணுகப்பெற்ற - என்க; ஆதியார் தம்மை எறிந்து என்றும், ஆதியார் தம்மை அணுக என்றும், கூட்டியுரைக்க நின்றது; எறிந்து - எறிந்த அதுவே ஆறாக - சாதனமாக. கோதில் சீர் -"நற்சாக்கியர்" (நம்பி. தேவா). ஆதி - சிவலிங்கம். |
| கொண்ட குறிப்பு - உட்கொண்ட குறிக்கோள்; முன் உய்வகையாற் பொருள் சிவன் என்றும் (3640), சிவலிங்கங் கண்டபின் உண்ணும் அது நியதியாகிய உய்வகை என்றும் (3644), அவ்வாறு சிவலிங்கம் கண்டநாள் நீண்ட களியுவகை நிலையிற் செயலறியாது பதைப்போடு கல்எறிய நேர்ந்த அதுவே திருவருள் ஆணை என்றும், ஆதலின் அதனையே தொடர்ந்து தவிராது செய்தல் வேண்டுமென்றும், பசுபதியார் தஞ்செயலே அடங்கலுமாமாதலின் துவராடைவேடம் களையாது அவ்வேடத்துடனே சிவன்பணி செய்யத் தக்கதென்றும் (3641), அயர்த்துண்ணப் புகுந்தபோதும் நினைவு வந்து எழுந்து எறிதல் வேண்டுமென்றும் (3651) கூடிய இவை கொண்ட குறிப்பு எனப்பட்டன. குறிப்பு - கொள்கை. |
| அவர்க்கு நல்கும்....துணிவதென் - முன்கூறியவை யெல்லாம் மனத்துள் நிகழ்ந்தனவே யாதலானும், புறச்செயல்கள் உலகரறியாதபடி உலக நிலைக்கும் விதிக்கும் மாறுபாடாவன வாதலானும், உயிர்க்குயிராக நின்று கண்டு அருளும் இறை |