[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 34. சாக்கிய நாயனார் புராணமும் உரையும்575

4. பல சமயங்களையும் ஆய்ந்தும் ஈறில் சிவனெறியே பொருளாவதென்று உணர்வு நாட்டப் பெறுதல் ஈசரருளானன்றிக் கூடாது. (3639)
5. ஞான நூல்களால் விதித்த பொருள், செய்வினை - செய்வான் - பயன் - கொடுப்பான் என்று நான்காகும்,. இவ்வாறு கண்டு உண்மைப் பொருள் நிச்சயம் செய்வது சைவசமயத்தி லன்றி வேறெந்தச் சமயத்திலும் இல்லை. (3640)
6. ஆதலினால் உய்யும் வகை வேண்டுவோர் அடையத் தக்கபொருளாவார் சிவபெருமானே என்றுணரத்தக்கது. (3640)
7. இவ்வுணர்ச்சி சிவனருளாலன்றி வராது.
8. சிவனை மறவாது பணி செய்தல் எந்த நிலையினின்றும் எந்தக் கோலத்தினின்றும் செய்யலாம். எல்லாக் கோலங்களும் சிவனிறைவுக்குள் அடங்குவன. புத்தர் வேடத்துடனேயும் சிவனை வழிபடலாம். (3641)
9. சிவ வழிபாட்டுக்குரிய சிறந்த இடம்சிவலிங்கத் திருமேனியாம். (3643)
10. சிவ வழிபாட்டிற் சிறந்ததொரு நியதியாய் உய்வகையிற் செலுத்துவது சிவலிங்கங் கண்டுண்ணும் நியமமாகும்.
11. சிவலிங்கங் கண்ட அப்போதே நீடு களியுவகை நிலைவரத் தம் செயலறியாது கல் எடுத்துப் பதைப்போடும் எறிந்தார் சாக்கியனார். அதுவே சிவனுக்குகந்த பூசையாயிற்று.
12. முதல் நாளின் செயல் அருட்குறிப்பு என்றறிந்ததனாலே இந் நாயனார் அதனையே தொடர்ந்து நாடோறும் பூசனையாகக் கொண்டனர்.
13. ஒருநாள் அந்நியதி மறந்துண்ணப் புகுந்தபோது நினைந்து வருந்தி ஓடி வந்து நியதியினை நிறைவேற்றி அருள் பெற்றனர்.
14. உணவுண்பதினும் சிவநியமமாகிய சிவ வழிபாடு சிறந்தது.

தலவிசேடம்: - சங்கமங்கைப்பதி - இது தொண்டைநாட்டில் காஞ்சியை அடுத்து உள்ள ஊர்.

சாக்கிய நாயனார் புராணம் முற்றிற்று