[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 35. சிறப்புலி நாயனார் புராணமும் உரையும்577

கின்ற தத்துவத்தின் காரணராய் விளங்கும் பண்புடையவர்; அவனியில்....மறை யோன் - நிலவுலகத்தில் கீர்த்தியையுடைய தென் ஆக்கூரில் அவதரித்த தலைவராகிய அரிய வேதியராகிய; சிவநியமம்....சிறப்புலியே - சிவனது நியமமாகிய ஒழுக்கத்திலே சிறந்து நின்ற பழமையாகிய சிறப்பினையுடைய நமது சிறப்புலியார்.
சாதனம் - உருத்திராக்க மணி; "திருநீறுந் சாதனமுங் கண்டா லுள்கி" (தேவா - அரசு); பொலிவார்தல் - அணிபெற நிறைய அணிதல். தவநியமத்தவர் - சிவனடியார்கள்; சிவன்....சீர் - "சீர்கொண்ட" என்ற தொகைநூற் பொருளை விளக்கியபடி; இதனை ஆசிரியர் விரித்தல் மேற் (3657 - 3658) காண்க. மறையோன் - சிறப்புலியே - தத்துவ காரணனாம் என்று முடிக்க.
தொகைநூல் பேரும் பண்பும் அடிமைத் திறமாகிய சரிதக் குறிப்பும் பேசிற்று; வகைநூல் ஊரும் மரபும் பேரும் பண்பும் சரிதச் சிறப்பும் அடிமைத் திறமும் வகுத்தது. இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டுகொள்க.
விரி: - 3654. (இ-ள்) பொன்னி....பதி - காவிரியின் நீர்பாய்ந்து செழிப்புச் செய்யும் சோழ நாட்டிலே பழமையாகிய அழகிய பதி; புவனத்துள்ளோர்.... என்று - "உலகத்துள்ளோர் வறுமையினாலே இரந்து (யாசித்து) சென்றோர்களுக்கு இல்லை என்னாதோ வேண்டுவனவற்றை வரையாது கொடுக்கும் தன்மையினை உடையவர்கள்" என்று; சண்பை....வாக்கூர் - சீகாழித் தலைவராகிய ஆளுடைய பிள்ளையார் நன்மை பொருந்திய வேதியர்களைப் பற்றி அருளிச் செய்த வேதத் திருவாக்கினைப் பெறும் பேறுடைய ஊராகிய; ஆக்கூர் - திருவாக்கூர் என்பதாகும்.
(வி-ரை) திருவாக்கூராகிய - ஆக்கூர் - பதி என்று கூட்டி முடிக்க; ஆக்கூர் பதி - யாகும் என்க. பெயர்ப் பயனிலை; திருவாக்கூ ராக்கூர் - சொல்லணி நயம் பெறக்கூறியது; "திருவாமூர் திருவாமூர்" (1277); இஃது ஆசிரியரது தெய்வக் கவிநயங்களுள் ஒன்று. திருவாக்கு ஊர் - திருவாக்கினாற் பரவப்பெற்ற ஊர்.
இன்மையால்....தன்மையார் - ஆளுடைய பிள்ளையார் தேவாரம். "இன்மையாற் சென்றிரந்தோர்க் கில்லையென்னா தீந்துவக்குந், தன்மையா ராக்கூறிற் றான்றோன்றி மாடமே" (பிள் - சீகாமரம் - 9)
நன்மை சார்ந்த வேதியரை - அருளிச்செய்த - அப்பதியின் வேளாளர்களை முன்னரே [பதிகம்-(3)] கூறியமையாலும், அப்பதி அந்தணர்கள் நிறைந்த பதியாகலானும் இத்தன்மை வேதியரைப் பற்றிய தென்றருளினர் ஆசிரியர்; இந்நாயனார் மறையவராதலின் இதனைக் குறித்தனர் என்க. இச்சரிதமுடைய நாயனாரது மரபின் பெருமைக் குறிப்பு. மறையவர்க்குரிய அறுவகைத் தொழில்களுள் ஈதலும் ஒன்றாதல் காண்க. சென்றோர் - வினையாலணையும் பெயர்.
மன்னனார் அருளிச் செய்த - மன்னவராற் பாராட்டப் பெற்றவர் என்றது குறிப்பு.
மறைத்திருவாக்கூர் - மறை - தேவாரங்கள். மறை - இறைவரருளிய வேதம் - போல்வன என்பது; வாக்கு ஊர் -வாக்கினைப்பெற்ற பேறுடைய ஊர். அத்திருவாக்கின் பெருமை பற்றி "அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்" (2986), "பிள்ளை யார்தந் திருவாக்கிற் பிறத்த லாலே" (2881) என்பனவும், ஆண்டுரைத்தனவும், பிறவும் பார்க்க.
பொன்னி நீர் நாடு - சோழநாடு; இது நாட்டுச் சிறப்பு .