|
  |  |  | 
  |  | மறைத்திருவாக்கூர் - இது குடிவளமும் மேன்மையும் பற்றி ஆளுடைய பிள்ளையார் திருவாக்கின்   பெருமை கொண்டு நகரச் சிறப்புரைத்ததாம். | 
    |  | வாக்கூரவ்வூர் - வாக்கூராகும் - என்பனவும் பாடங்கள் | 
    |  | 1 | 
    | 3655 |                               | தூமலர்ச் சோலை தோறுஞ் சுடர்நெடு மாடந்           தோறும் மாமழை முழுக்கந் தாழ மறையொலி முழக்க மோங்கும்
 பூமலி மறுகி லிட்ட புகையகிற் றூபந் தாழ
 ஓமநல் வேள்விச் சாலை ஆகுதித் தூப மோங்கும்.
 |  | 
    |  |  | 
    |  | 2 | 
    |  | (இ-ள்) தூமலர்....தோறும் - தூய மலர்கள் நிறைந்த சோலைகள் தோறும் ஒளி      விளங்கும் நீண்ட மாடங்கள் தோறும்; மாமழை....முழக்கம் ஓங்கும் - பெரிய மேக முழக்கம்      கீழ்ப்படும்படி வேத ஒலிகள் கூடிய முழக்கம் மேலோங்கும்; பூமலி....தாழ - அணி பொருந்திய      வீதிகளில் இட்ட அகிற்புகைத் தூபமணம் கீழ்ப்படும்படி; ஓமம்....தூபம் ஓங்கும் - ஓமங்கள்      செய்யும் வேள்விச் சாலைகளின் ஆகுதிகளின் புகை மேல் ஓங்கும். | 
    |  | (வி-ரை) மறை ஒலிமுழக்கம் - ஆகுதித்தூபம் - மறையவர்களின் பதியாதலின் இச்சிறப்புக்களாற்      கூறினார். ஆளுடைய பிள்ளையார் புராணம், சண்டேச நாயனார் புராணம் முதலியவை பார்க்க. | 
    |  | சோலைதோறும் - மாடம்தோறும் - மறைஒலி முழக்கம் - சோலைகளில் உள்ள மறைமுழக்கம்      வேதம் பயிற்றப் பெறும் மறைச் சிறார்களின் கிடைகளினின்றெழும் முழக்கம்; மாடந்தோறும்      உள்ள மறைமுழக்கம் மறையவர் மனைகள் தோறும் செய்யும் முத்தீ வேள்விகளில் சொல்லப்படும்      வேத மந்திரங்களின் முழக்கம். | 
    |  | மழை முழக்கம் - மேக வோசைகள்; வேத மந்திரங்கள் உயர்ந்த நிஷாத சுரத்தில்      ஓதப்படும்போது மேக வோசை, யானையின் பிளிறோசை என்ற இவைகளை ஒப்பன என்பதாம். "மேகமுங்      களிறு மெங்கும் வேதமுங் கிடையு மெங்கும்" (81) என்பது முதலியவை பார்க்க. ஒலி முழக்கம்      - பொருளுள்ள சத்தமே யாயினும் பலர்கூடி உயர்ந்த சுரத்தில் ஒலித்தலால் முழக்க      மாயிற்று என்றார். | 
    |  | மறுகில் இட்ட அகிற்புகைத் தூபம் - வீதிகளில் நன் மணத்தின் பொருட்டும் மக்களின்       உடல் சுகத்தின் பொருட்டும் நறும்புகை இடும் மரபு குறித்தது. | 
    |  | ஓம....தூபம் ஓங்கும் - ஓங்குதல் - அளவாலும் பயனாலும் மிகுதல் குறித்தது. நல்வேள்வி       - சிவனை முன்னாகச் செய்யும் வேள்வியாதலின் நல் என்றார். | 
    |  | மாமழை முழக்கம் - பருவந்தவறாது மாத மூன்று முறையாகப் பெய்யும் மேக ஓசை; இதுவும்       அகிற்புகைத் தூபமும் உலகியல் நலங்களின் பெருமை குறித்தன. | 
    |  | மறைஒலி- ஆகுதித்தூபம் - இவை வைதிக ஒழுக்கப் பெருமை குறித்தன. இவை ஓங்கும்       என்றதனால் இவ்விரண்டனுள் உலக நிலைச் சிறப்பினும் வைதிகச் சிறப்பே மிக்கது என்றதாம்.       இந்நாயனார் இரண்டானும் சிறந்து விளங்கியமையும், அவற்றுள் சிவநியமத்தினால் வீடுபெற்ற       நிலையும் குறிப்பா லுணர்த்தப்பட்ட வாறு கண்டு கொள்க. | 
    |  | சுடர் தொடு - என்பதும் பாடம். | 
    |  | 2 | 
    | 3656 |                                       | ஆலைசூழ் பூக வேலி யத்திரு வாக்கூர்             தன்னில் ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தி னுள்ளார்
 |  |