[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 35. சிறப்புலி நாயனார் புராணமும் உரையும்579

நீலமார் கண்டத் தெண்டோ ணிருத்தர்தந் திருத்தொண் டேற்ற
சீலராய்ச் சாலு மீகைத் திறத்தினிற் சிறந்த நீரார்.

3

(இ-ள்) ஆலை....தன்னில் - கரும்பு ஆலைகளைச் சூழ்ந்த கமுகுகள் வேலி போல அமைந்த அந்தத் திரு ஆக்கூரில்; ஞாலம்....உள்ளார் - உலகில் நிறைந்த புகழினாலே மிகுந்தவர்; நான் மறைகளையும் ஓதும் வேதியர்களது குலத்தின் வந்தவர்; நீலமார்....சீலராய் - விடம் பொருந்திய கண்டத்தினையும் எட்டுத் தோள்களையும் உடையவராகிய கூத்தப் பெருமானது திருத்தொண்டினை மேற்கொ ண்டொழுகும் சீலமுடையவராகி; சாலும்.....நீரார் - சால்பு பொருந்திய ஈகைத் திறத்திலே சிறந்த தன்மை வாய்ந்தவர்.
(வி-ரை) ஆலை - கரும்பு ஆலை; இங்குக் கரும்புப் பயிர்களையுடைய சோலைகளைக் குறித்தது; " கரும்பல்ல....கமுகென்ன" (65); பூகவேலி - பூகம் - கமுகு; வேலி - வேலிபோலச் சூழ்ந்த.
ஞாலமார்புகழ் - உலகியல்; நிலையினால் வரும் புகழ்; இஃது ஈகையினால் வருவது.
திருத்தொண்டு ஏற்ற சீலர் - சிவபெருமான் திருத்தொண்டினை மேற்கொண்ட நியம ஒழுக்கம்.
சாலும் ஈகைத்திறம் - ஈகையின் சால்பாவது திறம் தெரிந்து கொடுத்தல் "தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல" (திருவிளை - வாதவூ - பட.); இஃது உலகியல் நிலையில் வறுமையா ளக்கீவது; அளவுபட வருவது; இது பசு புண்ணியம். பதிபுண்ணியமாகிய சிவனடியார்க்குக் கொடுத்தல் வேறு. அது மேல்வரும் பாட்டிற் கூறப்படும்.

3

3657
ளுமங் கணருக் கன்ப ரணைந்தபோ தடியிற் றாழ்ந்து
மூளுமா தரவு பொங்க முன்புநின் றினிய கூறி
நாளுநல் லமுத மூட்டி நயந்தன வெல்லா நல்கி
நீளுமின் பத்துட் டங்கி நிதிமழை மாரி போன்றார்.

4

(இ-ள்) ஆளும்....தாழ்ந்து - உலகங்களெல்லாவற்றையும் ஆளுகின்ற அங்கணராகிய சிவபெருமானுடைய அன்பர்கள் வந்தணைந்தபோது அவர்களடியில் வீழ்ந்து பணிந்து; மூளும்....தங்கி - மூண்டெழுகின்ற அன்பு மேன்மேற் பொங்க, அவர்கள் திருமுன்பு நின்று இனிய மொழிகளைக் கூறி, நாள்தோறும் நல்ல உணவு ஊட்டி, அவர்கள் விரும்பிய வெல்லாவற்றையும் கொடுத்து அதனால் மேன்மேலும் பெருகிவளர்கின்ற இன்பத்துள்ளே வாழ்ந்து; நிதிமழை மாரி போன்றார் - நிதியை மழைபோலச் சொரிகின்ற மேகம் போன்றிருந்தனர்.
(வி-ரை) ஆளும் - உலகுயிர்களை யெல்லாம் உடைமையாகவும் அடிமை யாகவும் கொண்டு ஆளுகின்ற.
அடியில்....நல்கி - இவை அடியார்களை வழிபடும் முறை; அன்பர்களைச் சிவனாகவே எண்ணி வழிபடுதல் வேண்டு மென்பது சிவாகம விதி.
நயந்தன - அன்பர்கள் விரும்பியவற்றை; அவர்களுக்கு வேண்டுவனவென்று தாம் விரும்பியவற்றை என்ற குறிப்புமாம்.
நீளும் இன்பத்துள் தங்கி - அன்பர்களை நாடோறும் உபசரித்து வழிபட்டமையால் இன்பம் பெருகிவரும்; அந்த இன்பத்துள்ளே திளைத்து வாழ்ந்தனர். "ஆளு நாயக ரன்ப ரானவர்" (444) என்ற விடத்து இளையான் குடிமாறனார் வரலாறும்,