| |
| பிறாண்டும் இவ்வாறே வருவனவும் இங்கு நினைவு கூர்தற்பாலன; சிவன் அடியார்களை ஆதரவுடன் வழிபட் டுபசரித்தவர்களே இவ்வின்ப விளைவினை அறிய வல்லுநரன்றி, ஏனை உலகர்க்கு இஃது அறியவாராது என்க. நீளும் இன்பம் - இது முடிவில் வரும் முத்தியின்பம் வரையில் நீள்வது என்பது குறிப்பு. "ஞால மார் புகழ்" தரும் ஈகைக்கும் இதற்கும் உள்ள உயர்வு தாழ்வு ஒப்பிட்டுக் கண்டு கொள்ள வைத்த கவி நலங் கண்டுகொள்க. |
| நிதிமழை மாரி போன்றார் - மழை - மழை போலப் பெய்யும்; மாரி - மேகம்; நிதிமழை - பொன்மழை; கைம்மாறு கருதாது கொடுத்தலின் மாரி போல என்றார். |
| இன்னமுதம் - தங்கும் - என்பனவும் பாடங்கள். |
| 4 |
3658 | அஞ்செழுத் தோதி யங்கி வேட்டுநல் வேள்வி யெல்லாம் நஞ்சணி கண்டர் பாத நண்ணிடச் செய்து ஞாலத் தெஞ்சலி வடியார்க் கென்று மிடையறா வன்பால் வள்ளாற் றஞ்செயல் வாய்ப்ப வீசர் தாணிழற் றங்கி னாரே. | |
| |
| 5 |
| (இ-ள்) அஞ்செழுத்து....வேட்டும் - திருவைந்தெழுத்தை நியதியாக ஓதி முத்தீ வளர்த்து; நல்....செய்து - நல்ல வேள்விகளை எல்லாம் விடம் விளங்கும் கண்டராகிய சிவபெருமான் பாதங்களிற் பொருந்தும் வண்ணமாகவே செய்து; ஞாலத்து....வாய்ப்ப - உலகத்திலே குறைதல் இல்லாத சிவனடியார்களுக்கு எக்காலத்திலும் இடையறாது செய்யும் அன்பினாலே வள்ளல்களின் வரையாறு கொடுக்கும் தன்மை தமது செயலில் பொருந்தச் செய்து; ஈசர்....தங்கினாரே - இறைவரது திருவடி நிழலிலே நிலை பெற்றிருந்தனர். |
| (வி-ரை) அஞ்செழுத்தோதி அங்கிவேட்டு - இவை நித்த நியமம்; அங்கி - மறையவர்கள் மனையில் வளர்க்கும் நித்தியாக்கினி எனப்படும் முத்தீ. |
| வேட்டு - நல் வேள்வி....செய்து - வேள்வி - இவை நித்தியாக்கினியின் வேறாய் அவ்வப்போது குறித்த பயன் கருதிச் செய்யப்படுவன. இவ் வேள்விச் சாலைகள் நகர்ப்புறத்தில் பொதுவில் அமைவன. சண்டீச நாயனார்புராணம் பார்க்க. நஞ்சணி கண்டர் பாத நண்ணிடுதல் இவ் வேள்விகள் குறித்த பயன். இவை சிவயாகங்கள். "ஆறுசூழ் வேணி, நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி" (2327) என்ற விடத்துரைத்தவை பார்க்க.நல்வேள்வி - என்ற கருத்துமிது; ஏனைத் தேவர்களைக் குறித்தும், ஏனைப் பயன்களைக் குறித்தும் செய்யப்படும் பிற வேள்விகளினின்றும் பிரித்தலின் நல் என்றது பிறிதினியைபு நீக்கிய விசேடணம். |
| எஞ்சலில் அடியார் - குறைபாடுகளில்லாத; "ஈர வன்பினர் யாதும் குறைவிலார்" (144), "ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே" (அரசு); குறைபாடுகளை நீக்குபவர் என்ற குறிப்புமாம். |
| வள்ளல் தம் செயல் வாய்ப்ப - வள்ளல் - வள்ளற்றன்மை; அது தமது செயலில் பொருந்த. "சீர்கொண்டபுகழ் வள்ளல்" என்ற தொகைநூற் பொருளை விரித்தவாறு, |
| தங்கினார் - மீளாதபடி அடைந்து நிலைபெற்றனர். |
| 5 |
3659 | அறத்தினின் மிக்க மேன்மை யந்தண ராக்கூர் தன்னின் மறைப்பெரு வள்ள லார்வண் சிறப்புலி யாரை வாழ்த்திச் | |