| |
| புனைந்து வணங்கித் துதித்துச் சென்று, திருத்தொண்டர்களுடனே அந்த நல்ல பதியினின்றும் நீங்குகின்றாராய்ச்; சிவபெருமானது திருநாகேச்சரத்தை நினைந்து சென்று திருக்கோயிலினுள் புகுந்து வலங்கொண்டு இறைவரது திருவடிகளை வணங்கினார். |
| (வி-ரை.) மருது - திருவிடைமருதூர் என்னும் பதி என்றும், அப்பெயர் போந்த காரணமாகி அப்பதியிலுள்ள மருதமரம் என்றும் உரைக்க நின்றது; "அந்த விடைமருதி லானந்தத் தேனிருந்த, பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ" (திருவா). |
| சொன்மலர்கள் பன்னிப் புனைந்து - சொல்லாகிய மலர்களை ஆய்ந்து தெரிந்துதெடுத்து மாலையாகப் புனைந்து; பன்னுதல் - புனைதல் - சொற்களுக்கும் மலர்களுக்கும் ஒக்கும்; பன்னுதல் - ஆய்தல்; புனைதல் - தொடுத்தல்; ஏகதேச வுருவகம்; பன்னுதல் - பலமுறையும் பலவாறும் ஒருபொருளைச் சொல்லுதல் என்ற வழக்கும் காண்க. |
| ஏத்திப் பரவி - ஏத்துதல் - பதிகத்தால் போற்றுதல். பரவுதல் - தோத்திரித்தல். |
| முன்னிப்புக்கு - நினைந்தவாறே சென்று திருக்கோயிலினுள் புகுந்து என விரைவு தோன்றக் கூறியவாறு. |
| 65 |
| திருவிடைமருதூர் |
| திருச்சிற்றம்பலம் | பண் - தக்கேசி |
| கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற் கைப்பர் பாழ்புக ழற்றது போலப் பழுதி னானுழந் துட்டடு மாறிப் படுசு ழித்தலைப் பட்டன னெந்தாய் அழுது நீயிருந் தென்செய்தி மனனே யங்க ணாவர னேயென மாட்டா இழுதையே னுக்கோ ருய்வகை யருளா யிடைம ருதுறை யெந்தைபி ரானே. | |
| (1) |
| அரைக்குஞ் சந்தனத் தோடகி லுந்தி யைவ னஞ்சுமந் தார்த்திரு பாலும் இரைக்குங் காவிரித் தென்கரை தன்மே லிடைம ருதுறை யெந்தைபி ரானை உரைக்கு மூர னொளிதிகழ் மாலை யுள்ளத் தாலுகந் தேத்தவல் லார்கள் நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- "இழுதை யேனுக்கோ ருய்வகை யருளாய் இடைமருதுறை எந்தை பிரானே" என்ற பதிகத்தின் மகுடம் காண்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) "கழுதை குங்குமந்தான் சுமந்து" - பயனற்ற செயல் என்பது குறிக்க வழங்கும் பழமொழி. எய்த்தால் - வருந்தினாலும்; உம்மை தொக்கது. கைப்பர் - இகழ்வர்; பாழ் - வீண்; வருந்திச் சுமந்த பொருள் உயர்ந்ததாயினும் அதனால் அக்கழுதைக்கு ஒரு பயனுமில்லை என்பது; போல - அது போல்; பழுதில்...பட்டனன் - வீணே உடல் சுமந்து தடுமாறி அலைகின்றேன். உடலாற்பெறும் பயனை அடைந்தேனில்லை. "ஊனடைந்த உடம்பின் பிறவியே" "மானிடப் பிறவிதானும்" என்றற் றொடக்கத் திருவாக்குக்கள் காண்க; அழுது - வீணே கழித்ததற் கிரங்கி; இழுதையேன் - அறிவில்லாதவன்; உய்வகை...பிரானே - பதிகக் கருத்து;-(2) அரைத்த மஞ்சளதாவகை - பழமொழி. அரைத்த மஞ்சள் உடனே பயன்படுத்தாவிடின் தன்மை கெட்டு வீணாவது போல விரைவில் நரை மூப்பு முதலிய முடுகிச் சேரும் உடலை வீண் கழித்தேன்; இரைப்பன் - வீணன்; வெற்றொலியினன்; வீண் ஆரவாரமுடையோன்;-(3) புன் |