| |
| பணிந்தால் அவர்பாற் றிறைகொண்டு மீளுதலும், பணியாது போர் செய்யின் அவர்களது சின்னங்களைக் கைக்கொண்டு மீளுதலும் வென்ற படைத்தலைவர் செயலாம். இங்குப் பகையரசன் பணியாமையால் அவனது தலைநகரக் கோட்டையைத் தகர்த்துப் போர்ச் சின்னங்களாக இப்பண்டங்களைக் கொணர்ந்தனர். கவர்ந்து - என்ற குறிப்புமிது. புகழ்ச்சோழ நாயனார் புராண வரலாறும் பார்க்க. |
| எண்ணில் கவர்ந்தே - இப்பொருள்களுடன், பரஞ்சோதியார் அந்நகரினின்றும் ஒரு விநாயகப் பெருமான் றிருவுருவத்தையும் நினைவுக் குறியாகக் கொணர்ந்து அவரைத் தமது நகரமாகிய திருச்செங்காட்டங்குடித் திருக்கோயிலாகிய கணபதீச்சரத்தில் தாபித்தனர் என்றும் கூறுவர். |
| இயல் அரசன் - இகலினாலன்றி நீதியியல்பினால் அரசு புரிபவன். |
| பரிநிரையும் - இகலரசன் - என்பனவும் பாடங்கள். |
| 6 |
3666 | கதிர்முடிமன் னனுமிவர்தங் களிற்றுரிமை யாண்மையினை அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப, வறிந்தவமைச் சர்களுரைப்பார் "மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்தவலி யுடைமையினால் எதிரிவருக் கிவ்வுலகி லில்லை"யென வெடுத்துரைத்தார். | |
| 7 |
| (இ-ள்) கதிர்முடி மன்னனும்....உரைப்ப - ஒளிமுடியுடைய அரசனும் இவரது யானைப்படை செலுத்துதற்கு உரிய வல்லமையினைக் கண்டு அதிசயப்பட்டுப் புகழ்ந்து சொல்ல; அறிந்த....உரைப்பார் - அதனை அறிந்த மந்திரிகள் எடுத்துச் சொல்வார்களாகி; மதியணிந்தார்....உரைத்தார் - சந்திரனை அணிந்த சிவபெருமானது திருத்தொண்டு வாய்க்கப் பெற்ற வல்லமையினாலே இவரை எதிர்த்து நிற்போர் இவ்வுலகில் இல்லை என்று எடுத்துக் சொன்னார்கள். |
| (வி-ரை) கதிர்முடி மன்னன் - முடி துளங்குதலில்லாத தன்மை வெற்றிப் பாடு குறித்தது,. |
| களிற்றுரிமை ஆண்மை - யானைச் சேனையைச் செலுத்துதலில் இவருக்கே சிறப்புரிமையாகவுள்ள ஆளுந்தன்மை. "பாயுமதக் குஞ்சரமும்....விஞ்சை" (3662) என இதனை முன்வைத்து விதந்து கூறியது காண்க. |
| அதிசயித்து - தகர்க்க முடியாத வலிய அந்த வாதாவிக் கோட்டையினைத் தூளாகத் தகர்த்ததும், யானை முதலிய சின்னங்களை நிறையக் கவர்ந்து கொணர்ந்ததுவும் கண்டு அதிசயித்து; அதிசயம் - இன்னதென் றறியவரும்விம்மிதமாகிய பெருமித உணர்ச்சி. "அதிசயம் கண்டாமே" (திருவா). |
| புகழ்ந்துரைத்தல் - சேனைத் தலைவர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்து அணைக்கும் வகை. |
| அறிந்த அமைச்சர் - அறிந்த - அவ்வெற்றிப் பாட்டின் உண்மைக் காரணத்தை அறிந்த; மதியுடைய அமைச்சர்களாதலின் வெளிக் காரணமாகிய களிற்றுரிமை ஆண்மையினை யன்றி அதற்கு உள்நின்ற காரணமாகிய திருத்தொண்டி னுறைப்பாகிய நிலையினை உணர்ந்து எடுத்துக் கூறினர். |
| "மதியணிந்தார்....இல்லை" என எடுத்து - சிவன் றிருத்தொண்டின் உறைப்புடைய வலிமை பெற்றவர்கள் உலகில் யாரையும் வெற்றிக்கொள்ள வல்லவர். இவரை எவரும் வெல்லுதல் அரிது என்பது உண்மை; "நாணில் அமண் பதகருடன் |