62திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

னுனை...போலும் - பழமொழி; புல் நுனியில் உள்ள பனி சூரியனைக் கண்டபோது விரைவில் மறைவது போல அநித்தியமாகிய - நிலையில்லாத; நாளும்....என்றிருந்து - இன்பம் இன்று வரும் நாளை வரும் என்றென்று ஏமாந்து;-(4) முந்தி...நலிய - முற்பிறப்பிற் செய்த தீவினைகள் இப்போது வந்து வருத்த; நம்பிகளது சரிதக் குறிப்பும், ஞானநூற் றுணிபுணர்த்தியதும் ஆம்;-(5) அழிப்பர் - அழிவு செய்வோர்; ஐவர் - ஐம்புலன்கள்; காற்பெய்து - துன்பமெல்லாஞ் செய்து அதனுள் அழுந்தச் செய்து; விழித்து - மயக்க நீங்கி அறிவு பெற்று;-(6) குற்றம்...பெருக்கி - குற்றமும் குணமுமாகிய வினைகளை விரவப் பெரிதும் செய்து; எற்றுளேன் - எதன் பொருட்டு வாழ்கின்றேன்;-(7) கொடுக்ககிற்றிலேன் ஒண்பொருள் தன்னை - பொருள் தேடுதலெல்லாம் தம் பொருட்டன்றிப் பிறர்க்குக் கொடுத்தலின் பொருட்டே என்பது;-(8) ஐவகை யரைய ரவராகி - "மாறி நின்றெனை மயக்கிடும் வஞ்சப் புலனைந்து" (திருவா);-(9) ஏழை - வலியில்லாத; சிறிய வாழை - கல்வாழை, மலைவாழை முதலாகப் பழுக்காத வாழை வகைகள்; "வாழைதான் பழுக்கும் நமக்கென்று" - பழமொழி; கூழைமாந்தர் - அறிவில்லாத மக்கள். கடையில் தள்ளப்பட்டோர்; செல்கதி - அவர் போகும் வழி;-(10) நரைப்பு....இன்றி - (2-ம் திருப்பாட்டில்) வரும் என்றஞ்சிய நரை முதலியன; நடலை - வஞ்சனை
தலவிசேடம் :- திருவிடைமருதூர் - III- பக். 300 பார்க்க.
3220
பெருகும் பதிகம் "பிறையணிவா ணுதலாள்" பாடிப்பெயர்ந்து, நிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே, யுமையோர் பாகர் தாமகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து, கலய நல்லூர் மருங்கணைந்தார்.

66

(இ-ள்.) பெருகும்...பெயர்ந்து - இன்பம் பெருகும் "பிறையணி வாணுதலாள்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடி அங்குநின்றும் சென்று; நிறை...போந்தே - குறைவில்லாத நிறைவாகிய சிவச் செல்வம் நிறையும் திருச்சிவபுரத்தில் சேர்ந்து தேவர் தலைவராகிய சிவபெருமானது திருவடிகளை வணங்கி உருகும் சிந்தையுடனே மேற்சென்று; உமையோர்...பணிந்து - உமையம்மையைப் பாகத்தில் உடைய இறைவர் தாம் மகிழ்ந்து பொருந்தும் பதிகள் பிறவற்றையும் பணிந்து சென்று; கலயநல்லூர் மருங்கு அணைந்தார் - திருக்கலயநல்லூரின் பக்கத்தில் அணைந்தருளினர்.

(வி-ரை.) பெருகும் - இன்பம் பெருகுதற்கு ஏதுவாகிய; இன்பம் - சொல்லெச்சம்; இது சிவனடிமைத் திறத்தின் வரும் குறையாத இன்பம்; பெருக்கும் என்பது பெருகும் என நின்றது.

பிறையணி வாணுதலாள் - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
திரு - சிவத் திரு; முத்திச் செல்வம்.
பதிகள் பிற - இவை சிவபுரத்திற்கும் கலைய நல்லூருக்கும் இடையில் உள்ளவை என்பது கருதப்படும். இப்போது தெரியக்கூடவில்லை.

66

திருநாகேச்சரம்
திருச்சிற்றம்பலம்

பண் - பஞ்சமம்

பிறையணி வாணுதலா ளுமை யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க நீல மால்விட முண்டதென்னே