598திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

3675
ண்ணுதலார் கணபதீச் சரத்தின்கட் கருத்தமர
உண்ணிறையன் பினிற்பணிசெய் தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியா ரிடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுட னயந்துறையு நாளின்கண்,

16

3676
நீராருஞ் சடைமுடியா ரருளினா னிறைதவத்துப்
பேராள ரவர்தமக்குப் பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு வெண்காட்டு நங்கைபாற்
சீராள தேவரெனுந் திருமைந்த ரவதரித்தார்.

17

3675. (இ-ள்) கண்ணுதலார்....ஒழுகுவார் - நுதலிற் கண் உடைய இறைவரது கணபதீச்சரத்தின் கண்ணே கருத்துப் பதிய விரும்பி உள்ளே நிறையும் அன்பினாலே திருப்பணிகள் செய்து ஒழுகுவாராகிய அவர்; வழுவின்றி - குறைவில்லாமல்; எண்ணில் பெரும்....செய - அளவில்லாத பெருமையுடைய சிறந்த அடியார்கள் இடையறாது வந்து அமுது செய்தருள; நண்ணிய....நாளின் கண் - பொருந்திய பெரிய மகிழ்ச்சியுடனே விரும்பி அமர்ந்திருந்த நாளிலே,

16

3676. (இ-ள்) நீராரும்....அருளினால் - கங்கையாறு பொருந்திய சடை முடி யினையுடைய சிவபெருமானது திருவருளினாலே; நிறைதவத்து.... நங்கைபால் - நிறை தவத்தினை உடைய அவருக்குப் (சிறுத்தொண்டருக்கு) பெருகும் சிறந்த இல்லறத்தின் வேராகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை என்னும் மனைவியாரது மணிவயிற்றினிடமாக; சீராள தேவரெனும்....அவதரித்தார் - சீராள தேவர் என்னும் திருமகனார் வந்தவதரித் தருளினர்.

17

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3675. (வி-ரை) கருத்தமா உள்நிறை அன்பினில் - கருத்து அமர்தல் - மனம் ஊன்றி நிற்றல்; பணி செய்யும் ஆசையில் அழுத்துதல்; அமர - அமர்தலினால்; விரும்புதலினால்; அன்பினில் - அன்பு காரணமாக; உள்நிறை - மனத்தினுள் நிறையும்.
ஒழுகுவார் - ஒழுகுவாராகிய நாயனார்; வினையாலணையும் பெயர்; ஒழுகுவார் - உறையும் நாளின்கண் என்று முடிக்க.
வழுவின்றி - வழுவின்றிப் பணிசெய்து என்றும், வழுவின்றி அமுதுசெய என்றும், முன்னும் பின்னும் கூட்டி உரைக்க நின்றது. வழு - குறை.
எண்ணில் பெருஞ்சீர் - எண்ணில் - தொகையின் பெருமை; பெருஞ்சீர் - சிறப்பின் பெருமை.
நயந்து - அளவில்லாத அடியார்கள் இடையறாது அமுது செய்தல் கண்டு அதனில் மேலும் விருப்பம் மிகுந்து.

16

3676. (வி-ரை) அருளினால் - மைந்தர் அவதரித்தார் - என்க. "கூத்தனாரருனாலே....பெண் கொடியைப் பெற்றெடுத்தார்" (876) என்றது காண்க; அருளினால் - சிவன் பணியும், அடியாரை அமுதூட்டிய பணியும் கூடச் சிவனருள் சுரந்தமையால் என்க. "அடியார்க் குரிய வர்ச்சனை யுலப்பில் செய்த" (2938).
நிறைதவத்துப் பேராளர் - தவம் - அரன்பூசையும் அடியார் பூசையும்; நிறைதவம் - அவரது தவம் இம் மகப் பேற்றினாலே நிறைவெய்த உள்ளது என்ற குறிப்புப்பெற இவ்வாற்றால் உரைத்தமை காண்க. பேராளர் - பெரியவர்; தவம்