[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 36. சிறுத்தொண்ட நாயனார் புராணமும் உரையும்599

நிறைதற் கேதுவாகிய அடியார் பூசை; சிறுத்தொண்டர் என்ற காரணப் பெயரினைப் பூண்டவர் என்றலுமாம். பேர் - புகழுமாம்.
திருமனையறத்தின் வேராகி - மனையறமாகிய தாவரத்துக்கு மனைக்கிழத்தியாரே வேர் போன்றவர் என்பது; இவர்களது இல்லறச் சிறப்பும் மேல் வரும் சரித நிகழ்ச்சிக் குறிப்புமாம். "கருத்தொன்ற வரும்பெருமை நீதிமனை யறம் புரியும்" (3671). பெரும்திரு - பேரழகு பொருந்திய என்றலுமாம். வேர் - மூலம்;
அவர்தமக்கு - நங்கைபால் - மைந்தர் - அவதரித்தார் என்று தந்தையர் தாயர் இருவரையும் உடன்கூறியது இருவர் அன்பும் ஒருமித்துப் பின் நிகழும் சரிதக் குறிப்புப் பெறுதற்கு; "தொண்டர் மனைவியார் நீடு மகனார்" (3746) என்று இறுதியில் ஒன்றுசேர்த்துக் கூறும் திறமும் காண்க.
சீராளதேவரெனுந் திருமைந்தர் - சிறந்த இச் சரித விளைவுக்கு மூலமாய், இறைவர் தாமே விரும்பிய பண்டமெனச் சொல்லப்பெறும் பேறுபெற்றவராய், "சீராளன் சிறுத்தொண்டன்" என்று ஆளுடைய பிள்ளையாரது மறைத் திருவாக்கினிற் பிறக்கும் பேறுடையவராய் (3682), முருகப் பெருமானுடன் வந்து இறைவர் ஆட்கொள்ளும் தனிச் சிறப்புடைய பேறுபெறுபவராய் உள்ள பெருமைகள் எல்லாம் குறிக்க இங்கு இவ்வாறு அருமைபெறக் கூறினார். பின்னரும், "நீடு மகனார்" என்பது காண்க.

17

3677
அருமையினிற் றனிப்புதல்வர் பிறந்தபொழு தலங்கரித்த
பெருமையினிற் கிளைகளிப்பப் பெறற்கரிய மணிபெற்று
வருமகிழ்ச்சி தாதையார் மனத்தடங்கா வகைவளரத்
திருமலிநெய் யாடல்விழாச் செங்காட்டங் குடியெடுப்ப.

18

3678
ங்கலநல் லியமுழக்க மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க் களவிறந்த நிதியளித்துத்
தங்கண்மர பினிலுரிமைச் சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன் புரிந்துகாப் பணிபுனைந்தார்.

19

3677. (இ-ள்) அருமையினில்....பொழுது; அருமையாக ஒப்பற்ற மகனார் பிறந்த பொழுது; அலங்கரித்த....களிப்ப -அலங்காரங்கள் செய்து அப்பெருமையினால் சுற்றத்தார்கள் களிப்புற; பெறற்கரிய....வளர - பெறுதற்கரிய நாயனார் மனத்துள்ளே அடங்காத வகை மேலோங்கி வளர; திருமலி....எடுப்ப - சிறப்பு மிக்க நெய்யாடல் விழாவைத் திருச்செங்காட்டங்குடியில் உள்ளோர் எல்லவரும் செய்து கொண்டாட,

18

3678. (இ-ள்) மங்கல....வானளப்ப - மங்கலமாகிய நல்ல இயங்களின் முழக்கமும் மறைகளின் முழக்கமும் வானின் ஓங்க; அங்கணர்தம்....அளித்து - இறைவருடைய சிறப்புடைய அடியார்களுக்கு அளவில்லாத நிதிகளைக் கொடுத்து; தங்கள்....புரிந்து - தங்கள் குல மரபினுக்கு உரிமையாகிய சடங்குகளைப் பத்துநாட்களிலும் மேன்மேல் அதிகரிக்கும் மகிழ்ச்சியுடனே புரிந்து; காப்பு அணிபுனைந்தார் - காப்புச் சாத்தினர்.

19

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.