| |
| ஐம்படை - 150 - வது பாட்டுப் பார்க்க. திருமாலின் சங்கு சக்கரம் வாள் தண்டு வில் என்ற ஐந்து படைகள் பொலியப் பொன் முதலியவற்றாற் செய்யப்படுவது; இது காவல் செய்யும் என்பது மரபு. |
| சரி - கைவளை; தோளில் அணிவதுமுண்டு. |
| சுட்டி முதலாகச் சதங்கை யீறாகக் கூறப்பட்ட இந்த அணிகலங்களையெல்லாம் பூட்டப்பெற்று என்க. |
| அமர்தல் - விரும்பிச் செய்தல். |
| 21 |
3681 | வந்துவளர் மூவாண்டின் மயிர்வினைமங் கலஞ்செய்து தந்தையா ரும்பயந்த தாயாருந் தனிச்சிறுவர் சிந்தைமலர் சொற்றெளிவிற் செழுங்கலைகள் பயிலத்தம் பந்தமற வந்தவரைப் பள்ளியினி லிருத்தினார். | |
| 22 |
| (இ-ள்) வந்து....செய்து - முறைமையிற் வந்து வளர்ச்சி பெறும் மூன்றாண்டிலே மயிர் நீக்கு மணவினை என்னும் மங்கலச் சடங்கினைச் செய்வித்து; தந்தையாரும்....இருத்தினார் - தந்தையாரும் ஈன்றெடுத்த தாயாரும் தமது ஒப்பற்ற சிறிய தோன்றலாராகிய மகனாருக்கு மனம் மலர்தற்கேதுவாகிய சொற்களின் தெளிவினையுடைய செழுங்கலைகளைப் பயில்வதற்காகத், தமது பிறவிப் பந்தம் நீங்க வந்த அவரைப் பள்ளியினில் அமர்த்தினார். |
| (வி-ரை) தந்தையாரும் - தாயாரும் - செய்து - வந்தவரைப் பயில இருத்தினார் என்று கூட்டுக. |
| மூவாண்டின்....செய்து- "மயிர் நீக்கும் மணவினை" (1285) என இது சவுளக் கல்யாணம் எனப்படும் சிறப்புடையது என்பார் மயிர்வினை மங்கலம் என்றார். இது மூன்றாண்டிற் செய்யப்பெறுவது; செய்து - செய்வித்து. |
| சிந்தை....கலைகள் - சிந்தை மலர் - மனத்தை மலரச் செய்யும்; மலர் - மலர்த்தும் எனப் பிறவினைப் பொருள் கொள்க, "புலன் கொளுவ மனமுகிழ்த்த கருணீக்கி மலர்விக்கும் கலைபயில" (1285) என்றது காண்க. சொற்றெளிவு - கருவி; சிந்தை மலர்தல் - பயன்; கலை - சாதனம். |
| செழுங்கலைகள் - பலவேறு கலைஞானங்கள். தம் பந்தம் அற வந்தவர் - தம் பொருட்டானன்றித், தம்மை ஈன்ற இருவரது பந்தமும் அது காரணமாக வரும் பிறவியும் அறும்பொருட்டே அவதரித்தவர் என்பதாம்; மகன் என்னும் உலகப் பற்றை அறுத்தற்கு நிலைக்களமாய் வந்த இவர் அதன்மூலமே ஈன்றோர் பிறவியறுக்க ஏதுவாயினமை சரித விளைவாம். "என்றும் பிரியாதே யிறைஞ்சி யிருக்கும்" நிலை (3746) பெறுதற் கேதுவாயினார் என்பது. |
| வந்துவிளை - பந்தமறப்பிறந்தவரை - பள்ளியினில் அமர்த்தினார் - என்பனவும் பாடங்கள். |
| 22 |
3682 | அந்நாளிற் சண்பைநக ராண்டகையா ரெழுந்தருள முன்னாக வெதிர்கொண்டு கொடுபுகுந்து முந்நூல்சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார் தந் நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார். | |
| 23 |
| (இ-ள்) அந்நாளில்....எழுந்தருள - அந்நாளில் சீகாழி ஆண்டகையா ராகிய ஆளுடைய பிள்ளையார் அங்கு எழுந்தருள; முந்நூல் சேர்....சிறுத்தொண்டர் - முப் |