|
  |  |  | 
  |  | புரி நூலணிந்த பொன்பூண்ட மார்பினையுடைய சிறுத்தொண்டர்; முன்னாக.... புகுந்து - முன்னாகச் சென்று   எதிர்கொண்டு அழைத்துக்கொண்டு வந்து நகரினுட் புக்குத் தம் மனையில் எழுந்தருளுவித்து;   புகலிகாவலனார்தம்....நலஞ் சிறந்தார் - சீகாழித் தலைவரது நல்ல பெருமையுடைய திருவடிகளைத்   துதித்து நன்மை சிறக்கப் பெற்றார். | 
  |  | (வி-ரை) அந்நாளில்....கொடுபுகுந்து....போற்றிசைத்து - இவ்வரலாற்றினை ஆளுடைய   பிள்ளையார் புராணத்தினுள் தகுதியும் சிறப்பும் பற்றி விரிவாக (2366 - 2369) உரைத்தருளியமையால்   ஈண்டுச் சுருக்கிக் கூறினார்; ஆண்டுக் கண்டு கொள்க. | 
  |  | ஆண்டகையார் - பெரு வீரராகிய இந் நாயனாரைத் தொண்டாகக் கொண்டுடைய பேராற்றல் ஆண்டகைமை   எனப்பட்டது. | 
|  | முந்நூல்சேர் பொன்மார்பில் - என்றதனால் இவர் மரபுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டு என்பது   பெறப்படும்; முன் (3661) உரைத்தவை பார்க்க. | 
  |  | போற்றிசைத்து நலஞ் சிறந்தார் - தமது திருமனையில் எழுந்தருளிவித்து உபசரித்தனர்.   "போந்து மாமாத்திரர்தம்....திருமனையிற் புகுந்து....மாதவரவர் தாம் மகிழ்ந்தருள வமர்ந்தருளி"   (2369) என்றது காண்க. நலம் சிறத்தலாவது உபசரித்த அந் நன்மையில் விளங்குதல். | 
  |  | 23 | 
  | 3683 |                       | சண்பையர்தம் பெருமானுந் தாங்கரிய         பெருங்காதற் பண்புடைய சிறுத்தொண்ட ருடன்பயின்று மற்றவரை
 மண்பரவுந் திருப்பதிகத் தினில்வைத்துச் சிறப்பித்து
 நண்பருளி யெழுந்தருளத் தாமினிது நயப்புற்றார்.
 |  | 
  |  | 24 | 
  |  | (இ-ள்) சண்பையர் தம் பெருமானும்....பயின்று - சீகாழியர்களது தலைவராகிய ஆளுடைய   பிள்ளையாரும் தாங்குதற் கரிதாய் மேன்மேலும் ஓங்கிவளரும் பெரிய காதற் பண்பினையுடைய சிறுத்தொண்டருடன்   பயின்று இனிதமர்ந்தருளி; மற்றவரை....சிறப்பித்து - அவரை உலகம் போற்றும் திருப்பதிகத்திலே   பாராட்டி வைத்தருளிச் சிறப்புச் செய்து; நண்பருளி எழுந்தருள - தமது நண்பராகும் பேற்றினையும்   அவருக்குத் தந்தருளி எழுந்தருள; தாம் இனிது நயப்புற்றார் - தாம் இன்பத்துடனே பெருவிருப்பமும்   பொருந்த அமர்ந்தருளினார். | 
  |  | (வி-ரை) தாங்கரிய பெருங்காதற் பண்பு - முன் 3671 - 3672 - 3673 பாட்டுக்களில்   சிவன் அடியார்கள்பால் இவர்கொண்ட பெறுங்காதலின் உறைப்பு உரைக்கப்பட்டது; சிவன் கழலில்   அன்பு" பள்ளமடை யாயென்றும் பயின்று வரும் பண்பும்" முன் (3663) உரைக்கப்பட்டது;   பிள்ளையார் வருகை கேட்டு எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வந்த பண்பு முன் "பெருகியஞா னம் பெற்ற   பிள்ளையா ரெழுந்தருளும் பெருமை கேட்டுத்,. திருமருவு செங்காட்டங் குடிநின்றுஞ் சிறுத்தொண்ட  ரோடிச் சென்றங், குருகுமனங் களிசிறப்ப எதிர் கொண்டு தம்பதியுட் கொண்டு   புக்கார்" (2366) என்பதாதியாக உரைக்கப்பட்டதும் காண்க. | 
  |  | உடன் பயின்று - இஃது அணைந்தோர் தன்மை குறித்தது. "அன்பரொடு மரீஇ" (போதம்.12). | 
  |  | மண்பரவும் - மண் - மண்ணுலகத்தவர்; புண்ணியப் பேற்றினால் இப் புவனியில் வந்து பிறந்து   சிவநெறிவந்தொழுகுவோர்களே இத்திருப்பதிகங்களைப் பரவி உய்யும் திறத்தவ ராவர் என்பது;   ஏனை விண்ணவரும் பிறரும் அறிந்து பரவும் |