| |
3687 | அருகுதிரு முடிச்செருகு மந்தியிளம் பிறைதன்னைப் பெருகுசிறு மதியாக்கிப் பெயர்த்துச்சாத் தியதென்ன விரிசுடர்ச்செம் பவளவொளி வெயில்விரிக்கும் விளங்குசுடர்த் திருநுதன்மேற் றிருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க, | |
| 28 |
3688 | வெவ்வருக்கன் மண்டலமும் விளங்குமதி மண்டலமும் அவ்வனற்செய் மண்டலமும் முடனணைந்த தெனவழகை வவ்வுதிருக் காதின்மணிக் குழைச்சங்கு வளைத்ததனுட் செவ்வரத்த மலர்செறித்த திருத்தோடு புடைசிறக்க, | |
| 29 |
3689 | களங்கொள்விட மறைத்தருளக் கடலமுதக் குமிழிநிரைத் துளங்கொளிவெண் டிரட்கோவைத் தூயவட மணிந்ததென உளங்கொள்பவர் கரைந்துடலு முயிருமுரு கப்பெருக விளங்குதிருக் கழும்தினிடை வெண்பளிங்கின் வடந்திகழ, | |
| 30 |
3690 | செம்பரிதி கடலளித்த செக்கரொளி யினையந்திப் பம்புமிருள் செறிபொழுது படர்ந்தணைந்து சூழ்வதெனத் தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத் ததுசாத்தும் அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தி னணிவிளங்க, | |
| 31 |
3691 | மிக்கெழுமன் பர்களன்பு திருமேனி விளைந்ததென அக்குமணி யாற்சன்ன வீரமுமா ரமும்வடமுங் கைக்கணிகொள் வளைச்சரியு மரைக்கடிசூத் திரச்சரியுந் தக்கதிருக் காற்சரியுஞ் சாத்தியவொண் சுடர்தயங்க, | |
| 32 |
3692 | "பொருவிறிருத் தொண்டர்க்குப் புவிமேல்வந் தருள்புரியும் பெருகருளின் றிறங்கண்டு பிரானருளே பேணுவீர்! வருமன்பின் வழிநிற்பீ!" ரெனமறைபூண் டறைவனபோற் றிருவடிமேற் றிருச்சிலம்பு திசைமுழுதுஞ் செலவொலிப்ப, | |
| 33 |
3693 | அயன்கபா லந்தரித்த விடத்திருக்கை யாலணைத்த வணங்கொளிமூ விலைச்சூல மணித்திரூத்தோண் மிசைப்பொலியத் தயங்குசுடர் வலத்திருக்கைத் தமருகத்தி னொலிதழைப்பப் பயன்றவத்தாற் பெறும்புவியும் பாததா மரைசூட, | |
| 34 |
3694 | அருள்பொழியுந் திருமுகத்தி லணிமுறுவ னிலவெறிப்ப மருள்பொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்ப பொருள்பொழியும் பெருகன்பு தழைத்தோங்கிப் புவியேத்தத் தெரூள்பொழிவண் டமிழ்நாட்டுச் செங்காட்டங் குடிசேர்ந்தார். | |
| 35 |
| 3684. (இ-ள்) இத்தன்மை....அணைய - இத்தன்மையில் நிகழும் இவரது திருத்தொண்டு பெரிய கயிலை மலையில் எழுந்தருளிய இறைவரது திருவடியிணைகளின் கீழே சென்று அணைய; விடையவர்தாம் - இடபத்தையுடைய அவ்விறைவர் தாமே; அவருடைய....அருளுதற்கு - அவருடைய மெய்யாந்தன்மையினையுடைய அன்பினை நுகர்ந்து அருள் புரிவதன் பொருட்டு; சித்தமகிழ்....அணை |