[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்63

குறையணி கொல்லைமுல்லை யளைந் துகுளிர் மாதவிமேற்
சிறையணி வண்டுகள்சேர் திருநா கேச்சரத் தானே.

(1)

கொங்கணை வண்டரற்றக் குயிலும் மயிலும் பயிலுந்
தெங்கணை பூம்பொழில்சூழ் திருநா கேச்சரத் தானை
வங்க மலிகடல்சூழ் வயனாவல வூரன் சொன்ன
பங்கமில் பாடல்வல்லா ரவர்தம் வினைபற் றறுமே.

(10)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருநாகேச்சரத்தானே! என விளித்து விடமுண்டது, அறமுரைத்தது முதலாகிய அருளிப்பாடுகளை வினாவுமுகத்தால் பாராட்டித் துதித்தது.
பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) பிறை அணி - பிறை போன்ற; அணி - உவமவுருபு. பேழ்கணிக்க - அஞ்ச; அனுங்க - வருந்த;- (2) புரிதல் - நினைதல்; குரவம்...அரும்ப - குராவின் அரும்புகள் பாம்பின் பற்கள் போன்று மென்மை - வெண்மை - கூர்மை கொண்டன. "அரவின் வாயில் முள்ளெயி றேய்ப்ப அரும் பீன்று குரவம்பாவை முருகமர் சோலைக் குற்றாலம்" (பிள். தேவா - குறிஞ்சி); செருந்தி செம்பொன் மலர் - "செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி" (பிள். தேவா); - (3) பாலன் - மார்க்கண்டர்; வீடுவித்துக் கருத்தாகியது - வீட்டிப், பின் உயிர்ப்பித்து அருளியது;-(4) குன்றமலை - பல குன்றுகளைச் சாரலிற்கொண்ட மலை; இடையாள் - உமை;-(5) திரை - காவிரி நீரின் அலைகள்;- (6) மாதவத்தின்...போர்த்தது - தாருகவனத்து இருடிகள் செய்த அபிசார யாகத்தில் எழுந்து அவர்களால் ஏவப்பட்ட சிங்கம் - புலி - யானை இவற்றை அடர்த்துத் தோலைப் போர்த்த சரிதம்; கந்தபுராணம் முதலிய மாபுராணங்களுட் காண்க;-(7) நின்றவிம் மாதவம் - இறைவர் தென்முகமாகி வீற்றிருந்த நிலை;-(8) அர - வாசுகி;-(9) அங்கியல் யோகு - மூன்றாவது பாட்டுப் பார்க்க; அங்கி - தீயின் தன்மை; அங்கி இயல் - அங்கியல் எனநின்ற தென்றலுமாம்;-(10) விரவாகியது - அவற்றுள்ளும் ஏற்றவாறு விரவி நின்றது.
தலவிசேடம் :- திருநாகேச்சரம் - III - பக்கம் 303 பார்க்க.
குறிப்பு :- இத்திருப்பதிகத்தில் முன் பகுதியில் கூறிய இறைவரது அருட்செயல் ஒவ்வொன்றும் பிற்பகுதியில் பதியின் நகர வளமாக அருளிய நயம்காண்க.
3221
செம்மை மறையோர் திருக்கலைய நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு "குரும்பைமுலை யுமையா"ளென்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித் திசையின் விளம்பினார்.

67

(இ-ள்.) செம்மை...தொழுதெழுவார் - செம்மை நெறியில் நின்றொழுகும் மறையோர்கள் வாழும் திருக்கலயநல்லூ ரிறைவரது சேவடிகளின் கீழே முக்கரணங்களும் ஒன்றிய வணக்கம் பொருந்த வணங்கித் திருமுன்பு தோத்திரித்துத் தொழுது எழுவாராகி; கொம்மை...திருப்பதிகம் - பெருமையுடைய "குரும்பை முலை மலர்க்குழலி" என்று தொடங்கும் திருப்பதிகத்தினை; மெய்ம்மை..விளம்பினார் - மெய்ம்மையாகிய மாபுராண வரலாறுகள் பலவற்றையும் சிறப்பாக எடுத்துக் கூறிப் பண் இசை பொருந்தப் பாடியருளினார்.