| |
| மகிழ்வுடைய வயிரவத் திருக்கோலத்துடனே திருமலையினின்றும் எழுந்தருளி அணைவாராகி, |
| 25 |
| 3685. (இ-ள்) மடல்கொண்ட....சடையை - இதழ்கள் பொருந்திய கொன்றை மலர்களைச் சூடிய நீண்ட சடையினையே; கடல் மண்டி....சுருள்போல் - கருங்கடலிற் கூடி நீரினை மொண்டு மேலெழுந்த கருமேகத்தினது சுருள்போல்; தொடர்பங்கி....கொந்தளமாக - தொடர்ந்து நீண்ட தலைமயிர் சுருண்டு காடடர்ந்து நெறிப்பும் அசைவும் உடையதாய்ச் செறிந்து படரும் வரிசையுடைய கருங்குஞ்சிக் கொத்துப்போல (ஆக்கி); வனப்பெய்த - அழகுபட; பரப்பி முடித்து, |
| 26 |
| 3686. (இ-ள்) அஞ்சனம்....பம்பை - மைக்குழம்பை முழுக்குச் செய்தது போல அழகுமிகும் கருமயிராகிய மஞ்சினிட....பரப்பென்ன - மேகத்தினிடையிடையே எழுந்து தோன்றும் விண்மீன்களின் பரப்புப்போல; புஞ்சநிறை....ஆர்ப்ப - திரட்சியாக வரிசையாய்ப் பலவகை வண்டின் கூட்டங்கள் பக்கங்களிற் சூழ்ந்து ஒலிக்க; துஞ்சின் நுனி - நிலைபெறும் வரிசைகளின் விளிம்பிலே தனி....தோன்ற - தனித்தனி பரப்பிய மணமுடைய தும்பை மலர்கள் விளங்க, |
| 27 |
| 3687. (இ-ள்) அருகு....என்னை - திருமுடியின் ஒருபக்கத்திற் செருகும் அந்தி மாலையில் காணும் இளம்பிறையினையே ஒளிபெருகும் சிறிய முழுமதி போல ஆக்கி மீண்டும் (நெற்றியிலே) தரித்தது போல; விரிசுடர்....திருநுதல் மேல் - விரியும் ஒளி பொருந்திய செம்பவளச் சோதியின் கதிர்களை விரித்து வீசும் விளக்கமுடைய சுடர்த்திருநெற்றியின் மேலே; திருநீற்று....இலங்க - திரு நீற்றின் ஒற்றைப் பொட்டு ஒளிவீசி விளங்க, |
| 28 |
| 3688. (இ-ள்) வெவ்வருக்கன்....என - வெப்பமுடைய சூரிய மண்டலமும் விளக்கமுடைய சந்திர மண்டலமும் அந்த அக்கினி மண்டலமும் ஒருங்கு கூடியதுபோல; அழகை....சிறக்க - அழகைத் தன்வயமாக்கும் திருச்செவியிலே அழகிய சங்கக் குழையினை வளைத்து அணிந்து, அதனுள்ளே செவ்வரத்தம் பூவைச் செறித்த திருத்தோடு இருபக்கங்களிலும் சிறந்து விளங்க; |
| 29 |
| 3689. (இ-ள்) களங்கொள் விடம்....அணிந்ததென - திருக்கண்டத்தில் கொண்ட விடத்தினை மறைத்தருளும் பொருட்டுப் பாற்கடலில் எழுந்த அமுதத்தின் குமிழ்களின் வரிசையாகிய வாய்ந்த ஒளியினையுடைய வெள்ளிய திரட்சிகளின் தூயவடத்தினை அணிந்தாற்போல; உளங்கொள்பவர்....உருக - மனத்தினுள்ளே சிந்திப்பவர்களுடைய உடலும் உயிரும் உருகும்படி; பெருக....வடந்திகழ - மிக விளங்குகின்ற திருக்கழுத்திலே வெள்ளிய பளிங்குமாலை விளங்க. |
| 30 |
| 3690. (இ-ள்) செம்பரிதி.......ஒளியினை - சிவந்த சூரியன் கடலிற் குளிக்கும்போது தரும் செவ்வான ஒளியினை; அந்தி....சூழ்வதென - அந்தி முதிர வரும் இருளடர்ந்த இராப்போது படர்ந்து வந்து சூழ்வது போல; அம்பவளத்திரு மேனி - அழகிய பவளம்போன்ற திருமேனியின் மேல்; தம் பழைய....சாத்தும் - தமது பழய யானைத்தோற் போர்வையினையே கொண்டு ஆக்கியதனையே சாத்தும்; கஞ்சுகத்தின் அணிவிளங்க - சட்டையினது அழகு விளங்க, |
| 31 |
| 3691. (இ-ள்) மிக்கெழும்....விளைந்ததென - அன்பர்களிடத்தே மேல் ஓங்கி எழுகின்ற அன்பானது தமது திருமேனியின்மேல் அங்கங்கும் உருவமைந்து விளைந்தது போல; அக்குமணியால்....காற்சரியும் - எலும்பு மணிகளாலமைத்த வெற்றி |