[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 36. சிறுத்தொண்ட நாயனார் புராணமும் உரையும்609

3687. (வி-ரை) அருகு - நெற்றியின் அருகு; பிறை தன்னை மதியாக்கிச் சாத்திய தென்னத் - திருநீற்றுப் பொட்டு - இலங்க - பிறையினையே சிறிய முழுமதியாக்கிச் சாத்தியது போல விளங்கிற்று வெள்ளிய திருநீற்றுத் தனிப் பொட்டு என்பது. பெருகு சிறு - முரண் அணி.
பெருகு சிறுமதி ஆக்கி - இளம்பிறையினையே நிறைமதியாக்கியதனால் சிறுமதி யாயிற்று என்பது குறிப்பு. சிறிய வடிவுடைய நிறைமதி. பெருகு - வளரும்.
பெயர்த்து - நெற்றி அருகில் முடிவில் இருந்ததனை இடம் பெயர்த்து நெற்றியிற் சாத்தியது போல: திரும்பவும்.
விரிசுடர்....நுதல் - ஒளி வீசும் செவ்விய நிறமுடைய திருநெற்றி; வெயில் - ஒளி; பவளவொளி - திருமேனியின் செவ்வொளி; திருநீற்றுத் தனிப்பொட்டு - வயிரவ சமயிகள் திருநீற்றினை நெற்றி விரவ முழுமையும் பூசாது பெரிதாய் ஒற்றை நீற்றுப் பொட்டு மட்டும் வைப்பர்; தனிப்பொட்டு - ஒப்பற்ற பொட்டுமாம்; திருநீற்றுப் பொட்டின் விளக்கத்துக்கு மதியை உவமித்தது பற்றித் "தோற்று மன்னுயிர்கட்கெலாந் தூய்மையே, சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய், ஆற்ற வண்டமெ லாம்பரந் தண்ணல்வெண், ணீற்றின் பேரொளி போன்றது நீணிலா' (308); "திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ் சேர்ந்த போதி, லிரண்டு நில வின்கடல்க ளொன்றாகி யணைந்தனபோல்" (1498) என்றனவும், பிறவும் காண்க.

28

3688. (வி-ரை) அவ் அருக்கன் மண்டலமும்....உடன் அணைந்ததென - அருக்கனும் மதியும் அனலும் உடன் அணைந்ததென என்னாது அவ்வவர்களின் மண்டலங்களும் உடன் அணைந்தது என்றார்; அவை மூன்றும் கண்களாய் மேலே விளங்குகின்றன; அக்குறிப்பினை முன்பாட்டில் மதி - விரிசுடர் - வெயில் - என்று கூறியருளினாராதலின், அவ்வொளிகள் விளங்குதற் கிருப்பிடமாயுள்ள மண்டலங்கள் கீழே மூலம் போலக் காதுகளில் அமைந்தனபோல என்று கவி நயம்படக் கூறியருளிய திறம் காணத்தக்கது; மண்டலம் - தோற்றத்திற் கிடம்; புவனம் (பு - தோன்றுதல்;) என்பதும் குறிப்பு.
வெவ் அருக்கன் - விளங்குமதி - அவ் அனல் - வெம்மை - சூடு; விளங்குதல் - முன்பாட்டில் விளக்கம் கூறியது குறிப்பு; அவ்வனல் - முன்னர்க் கூறிய; விரி....சுடர்த் திருநுதல் என்று விரித்ததனாற் குறிப்புப் பெற்ற அந்த என முன்னறி சுட்டு; முன் பாட்டில் திருநீற்றுப் பொட்டின் தூய ஒளிக்கு உவமிக்கப்படும் பெருமை பெறுதல் குறிக்க விளங்கும் என்றார் என்றலுமாம். உடனணைந்ததென - உடன் அணையலாகாத இவை மூன்றும் உடனியைந்ததென என்று அபூத உவமைத்திறம் வெளிப்படக் கூறியவாறு.
அழகை வவ்வுதல் - உலகில் உள்ள அழகெல்லாந் தாமே கவர்ந்து கொள்ளுதல்; காது - காதுகள்.
சங்குக் குழை - என்க. மணி - மணிபோன்ற அழகிய; "சங்கக் குழையார் செவியா! வழகா!" (தேவா), சங்கு மணிக் குழையை வளைத்து.
செவ்வரத்த மலர் செறித்த - குழையினுள் மலரைப் புகுத்திய; செறித்தல் திணித்தல்.
காதும் - அதனுள் குழையும் - அதனுள் மலரும் ஆக விளங்குதல் அருக்கண் மண்டலம், மதிமண்டலம், அனல் மண்டலம் மூன்றும் முறையே பட ஒருங்கு தோன்றுதல் போல உள்ளன என்பது; மண்டலம் வளைவும் குறிப்பது. மணிக்குழை சங்கு