| |
| (வி-ரை.) செம்மை - சைவ ஒழுக்கத்துள் நிற்கும்; மறையோர் - கலைய நல்லூர் மறையோர் வாழும் பதி என்பது: "திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞலூர்" என்புழிப்போல. |
| மும்மை வணக்கம் - மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களும் ஒன்றித்துப் பொருந்தும் வணக்கம். |
| எழுவார் - விளம்பினார் - என்று கூட்டுக. எழுவார் - முற்றெச்சம். |
| குரும்பைமுலை மலர்க்குழலி என்பது பதிகத் தொடக்கம். "மலர்க்குழலி" என்றதனை உமையாள் எனப் பொருள் விரித்துக்கொண்டார். |
| மெய்ம்மை....சிறப்பித்து - பதிகத்துள் ஒவ்வோர் பாட்டிலும் மாபுராண வரலாறுகளுள் ஒவ்வொன்றைச் சிறப்பாக விரித்து மிக அழகாகப் போற்றியிருத்தல் காண்க. இவற்றைக் குறிக்கொள்ளும்படி ஆசிரியர் வைத்தருளிய ஆணை. |
| இசை - பதிகப் பண்ணாகிய காந்தாரம். இப்பதிகம் பயின்று ஓதப்பட்டு வருதலும் காண்க. |
| மெய்ம்மைப் புராணம் - மாபுராணங்களுட் பேசப்படும் வரலாறுகளும் அனைத்தும் மெய்யேயாம்; ஒவ்வோர் மெய்ம்மையினை உணர்த்துவன; மெய்யாகிய (சத்) இறைவரைப் பற்றியன என்ற பலவும் கொள்க. |
| 67 |
| திருக்கலையநல்லூர் |
| திருச்சிற்றம்பலம் | பண் - தக்கராகம் |
| குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்றவுடன் குணத்தினைநன் கறிந்து விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில் அரும்பருகே சுரும்பருவ வறுபதம்பண் பாட வணிமயில்க ணடமாடு மணிபொழில்சூ ழயலின் கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் கமலங்கண் முகமலருங் கலையநல்லூர் காணே. | |
| (1) |
| தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன் றாமரையோன் றலைகலனாக் காமரமுன் பாடி யுண்பலிகொண் டுழல்பரம னுறையுமூர் நிறைநீ ரொழுகுபுன லரிசிலின்றென் கலையநல்லூ ரதனை நண்புடைய நன்சடைய னிசைஞானி சிறுவ னாவலர்கோ னாரூர னாவினயந் துரைசெய் பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம் பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- குரும்பைமுலை..வேட்டருளிச் செய்த - இது பார்வதியம்மையார் திருமண வரலாறு குறித்தது; கந்தபுராணம் பார்க்க; (தவங்காண் படலம், பார்வதியம்மையார் திருமணப் படலம் முதலியவை.) குறிப்பு :- திருமணம் செய்து உலகுக்குப் போகபோக்கியங்களைத் தந்தருளும் குறிப்பு. அறிந்து - புலப்படுத்தி; கண்வளரும் - கண்போல வளரும் என்றும், கண்துயிலும் என்றிருபொருளும்பட நின்றது தமிழ் நலம்; கமலங்கண் முகமலரும் - கமலம் கண் |