[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 36. சிறுத்தொண்ட நாயனார் புராணமும் உரையும்617

3698. (வி-ரை) இப்பாட்டு முழுதும், மேலும் வருவன, திருவெண்காட்டு நங்கையம்மையார் வயிரவ சங்கமரை நோக்கிக் கூறும் விண்ணப்பம்; அவரை அங்கு நின்றும் அகலாதிருக்கும் வகையாற் கூற வேண்டிய உயர்ந்த பொருளும், சிறந்த ஏற்ற சொல்லாற்றலும் பொருந்திய உயர்குடிப் பண்பாடு கண்டுகொள்க. இப்பாட்டினில் "வளவ நின்புதல்வன்" (116) என்ற பாட்டினிற் போலச்சிறந்த மந்திரித் தன்மையாகிய அறிவு நுட்பமும் புலப்படுதல்காண்க.
அமுது செய்விப்பார் - இற்றைக்குக் கண்டிலர் போனார் - தேவரீர் விரும்பி வந்த காரியமே அவர் தேடிப் போயின காரியம் என்றது அவரது விருப்பத்தைக் கவரச் செப்பியபடி; இற்றைக்கு யாவரையுங் கண்டிலர் - இஃதோர் புதுமை என்றதனோடு உமது அருமைப்பாடு மிகுவதாம் என்றதும் குறிப்பு.
வம்பென - வம்பு - புதுமை; வம்பென - உலகியலினில்லாத சழக்கு என்ற குறிப்பும் காண்க. "வம்ப மாரியைக் காரென."
பெரிய பேறு - பெறுதற்கரிய பெரும்பேறு.
தாழார் - பயிரவர் அகன்று விடாமைக்குரிய காரணங் காட்டியபடி; இவ்வேளைக்குள் அறிந்திருப்பர் ஆதலின் தாழார் என்பது குறிப்பு.

39

3699. (வி-ரை) இப்பொழுதே வந்தணைவர் - "இனித் தாழார்" என முன்பாட்டிற் கூறியதனைத் தொடர்ந்து கூறியது அக்கருத்து.
ஒப்பில் மனையறம் புரப்பீர் - சரிதமேல் நிகழ்ச்சிக் குறிப்பு.
உத்தராபதி - வடதேயம். "வடதேசத்தோம்" (3702); "உத்தராபதியார்" என்று இக்கோயிலில் இம்மூர்த்தி இன்றும் வழங்கப்படுதல் காண்க.
காண - "அன்பு நுகர்ந் தருளுதற்கு" (3684); உலகத்தார்க்கு வெளிப்படக்காட்டும் பொருட்டுத் தாம் காண என்ற குறிப்பும் காண்க. "கண்டு காட்டலின்" (போதம்); அறியச் செய்ய - காட்ட - என்னும் பொருட்டு.
எப்பரிசும் - நீவிர் கூறிய எக்காரணங் கொண்டும்.

40

3700. (வி-ரை) கண்ணுதலிற் காட்டாதார் - நுதற் கண்ணை மறைத்து வந்த வயிரவ சங்கமக் கோலத்தர்.
இருக்கின்றோம் - இருப்போம்; தங்குவோம்; எதிர்காலம் நிகழ்காலமாய் வந்தது.
இருந்த - இருக்கும்; எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது.
திருவாத்தி - இம்மரம் இன்றும் இக்கோயிலிற் காணவுள்ளதாம். அதன்கீழ் உத்தராபதியார் சந்நிதியும் உண்டு. இஃது ஆத்தியின் ஒருவகை. காட்டாத்தி என்பர்.
இந்த ஆறு பாட்டுக்களாலும், முன் பாட்டுக்களாலும் சிவனருளும் தசகாரியங்களுள் சிவரூபம், சிவதரிசனம் என்ற காரியங்கள் நிகழ்ந்தமை குறிப்பு.

41

வேறு

3701
நீரார் சடையா ரடியாரை நேடி யெங்கும் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா வின்ப மனைவியார்க் கியம்பி யழிவெய் திட,வவரும்
பாரா தரிக்குந் திருவேடத் தொருவர் வந்த படிபகர்ந்தார்.

42