[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 36. சிறுத்தொண்ட நாயனார் புராணமும் உரையும்619

3704
"பூதி யணிசா தனத்தவர் முன் போற்றப் போதே னாடியினும்
நாத னடியார் கருணையினா லருளிச் செய்வர் நானென்று;

கோதி லன்பர் தமையமுது செய்விப் பதற்குக் குலப்பதியிற்
காத லாலே தேடியுமுன் காணேன் றவத்தா லுமைக்கண்டேன்,"

45

3705
"அடியேன் மனையி லெழுந்தருளி யமுது செய்யவேண்டு" மென,
நெடியோ னறியா வடியவர்தாம், "நிகழுந் தவத்தீ ருமைக்காணும்
படியால் வந்தோ; முத்தரா பதியோ; மெம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி தொண்ணா" தென்று மொழிந்தருள;

46

3706
"எண்ணா தடியேன் மொழியேனீ ரமுது செய்யு மியல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீ! ரருளிச் செய்யுங் கடிதமைக்கத்,
தண்ணா ரிதழி முடியார்தம் மடியார் தலைப்பட் டாற்றேட
ஒண்ணா தனவு முளவாகு; மருமை யில்லை" யெனவுரைத்தார்.

47

3702. (இ-ள்) அடியேன்......என்ன - அடியேன் உய்தி பெற்றேன்; அவர் எங்கு இருக்கின்றார்! சொல்வாயாக! என்று கூற; அவர் மொழிவார் - அவ்வம்மையார் மொழிவாராகி; வடிசேர்....கணபதீச்சரத்து - வடித்த கூர்மையுடைய சூலத்தினையும் கபாலத்தினையும் ஏந்தியவர்; நாம் வடதேசத்திலுள்ளோம் என்றார்; அவர் வளமையுடைய துடியினை ஒரு கையினிற் பிடித்த வயிரவச் சங்கமர்; நாங்கள் மனையில் எழுந்தருளி யிருக்கும்படி சொல்லி வேண்டவும் இங்குத் தங்கி இருக்காமல் சென்று கணபதீச் சரத்தில் மணமுடைய திருவாத்தியின் நிழற்கீழ் இருந்தார்.

43

3703. (இ-ள்) என்று.....இயம்ப - என்றிவ்வாறு மனைவியார் சொல்ல (அது கேட்டு); எழுந்த....சிறுத்தாண்டர் - மேன்மேல் எழுந்த விருப்பத்தினாலே விரைந்து சென்று சேர்ந்து அவரைக் கண்டு திருப்பாதங்களிற் பணிந்து நின்றார்; நின்ற....திருவாய் மலர்ந்தருள -(அவ்வாறு) நின்ற தொண்டரை நோக்கி "நீர்தாமோ பெரியவராய்ச் சொல்லப்படுகின்ற சிறுத்தொண்டர் என்பவர்?" என்று திருவாய் மலர்ந்தருளி வினவியருள; இறைவர்....உரைப்பார் - (அவர்) இறைவரை வணங்கி உரைப்பாராகி,

44

3704. (இ-ள்) பூதி..நான் என்று - திருநீற்றுத் தொண்டர்களின் முன்சென்று துதிக்கவும் நான் தகுதியில்லே னானாலும் சிவனடியார்கள் தங்கள் கருணையினால் அப்பெயருடையவன் நான் என்று சொல்லுவார்கள்; கோதில்....காணேன் - குற்றத்தினை இல்லையாகச் செய்யும் அடியார்களை அமுது செய்விப்பதற்காக இப்பழமையாகிய பதியில் பெருவிருப்பத்தாலே எங்கும் தேடியும் இதன்முன் கண்டிலேன்; தவத்தால் உ(ம்)மைக் கண்டேன் - முன்னைத் தவத்தின் பயனாலே உம்மைக் கண்டேன்;

45

3705. (இ-ள்) அடியேன்.....என - அடியேனது மனையில் தேவரீர் எழுந்தருளி வந்து திருவமுது செய்தல் வேண்டும் என்று வேண்ட; நெடியோன்..... மொழிந்தருள - நீண்ட மாலும் அறிய மாட்டாத அவ்வடியவர்தாம் விளங்கும் தவத்தினை உடையவரே! உம்மைக் காணும் பொருட்டாக வந்தோம்; வடநாட்டில் உள்ளோம்; எம்மை அன்புடன் அமுது ஊட்டுவதற்கு உமக்கு முடியாது;