620திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

அச்செய்கை செய்தல் அரிதாகும்; ஆதலின் உம்மால் செய்யவொண்ணாது என்று மொழிந்தருள,

46

3706. (இ-ள்) எண்ணாது.....அடியேன் - அடியேன் தீர ஆலோசியாமற் சொல்லமாட்டேன்; நீர்.....கடிதமைக்க - கண்ணிறைந்த அழகினை உடைய நிறைந்த தவத்தினையுடையவரே! தேவரீர் திருவமுது செய்யும் இயல்பினை, விரைவில் அமைப்பதன் பொருட்டு, அருளிச் செய்வீராக!; தண்ணார்....என உரைத்தார் - குளிர்ந்த கொன்றை மாலையை முடியில் தரித்த இறைவரது அடியார்கள் கிடைக்கப் பெற்றால் தேடினும் கிடைக்காதனவும் கிடைக்க உள்ளனவாகும்; எனக்கு அருமையில்லை என்று சொன்னார்.

47

இந்த ஐந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன்.
3702. (வி-ரை) அடியேன் உய்ந்தேன் - எனது நியமம் பிழையாது செய்யப் பெறுதலின் உய்தி பெற்றேன். இறந்தகாலம் விரைவு குறித்தது. சரித விளைவின் முற்குறிப்புமாம்.
வடிகொள்.....கணபதீச்சரத்து - இத்துணையும் நிகழ்ந்தவற்றை யெல்லாம் சுருக்கி வடித்து அம்மையார் தமது நாயகனார்க்குக் கூறியது. கவிநயமும் பொருளமைதியின் அழகும் கண்டு களிக்க.
வடிகொள் சூல கபாலத்தர் - "வயங்கொளிமூ விலைச்சூலம்....பொலிய" (3693) "மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்ப" (3694) என்று கூறியபடி, அது காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. சூலமும் காபலமும் வயிரவ சங்கமர் என்பதனை அறிவிக்கும் அடையாளங்கள். முன்னர்த் "திருவேடத்து ஒருவர்" (3701) என்றது அவரது சிவனடியார் வேடத்தைப் பொதுமையி லுணர்த்தியது.
துடிசேர் கரத்துப் பயிரவர் என்றது அவர் இதுவரை வந்த அடியார்களின் வேறாய், அகப்புறச் சமயத்து வைரவ சமயச் சார்புடைய சங்கமர் என்று முடித்துக் கூறி அறிவித்த நயம் கண்டுகொள்க.

43

3703. (வி-ரை) எழுந்த...நின்றார் - அடியாரைக் காணுதற் கிருந்த பேரார் வத்தினை, விரைந்து எய்திச் சென்று - கண்டு - பணிந்து - நின்றார் என்று கூறிய செறிவும் விரைவும் பற்றி விளக்கிய கவிநயம் காண்க. நின்றார் சிறுத்தொண்டர் என்று எழுவாயைப் பின் வைத்த நிலையும் வினை முடிவின் விரைவு குறித்தது.
நின்ற - அவ்வாறு பணிந்து நின்ற.
நீரோ பெரிய சிறுத்தொண்டர்? - பெரிய - சிறு - முரண் தொடைச்சுவை படக்கூறியது நயம்; பெருமை புகழாலும் அடிமைப் பண்பினாலுமாம்; அவற்றுடனே சிறுத்தொண்டர் - என்ற அவர் பெயரால் அறிந்தமை புலப்படக் கூறியபடி; "தொண்டானார்க் கெந்நாளுஞ் சோறளிக்கும் திருத்தொண்டர்" (3695) என முன்னர் அறிவித்தமையும் காண்க.
திருவாய் மலர்ந்தருள - பெரியவர்கள் முன், தாம் முன்னே பேசாது, அவர்கள் வாய்மொழியை எதிர்பார்த்து வணங்கி நிற்றலும், வந்த நிலையைக் குறிப்பாலுணர்த்தலும், கேட்டவற்றிற்கு அவ்வளவில் விடைமொழிந்து நிற்றலும் மரபு; இங்கு வயிரவர் வினவியபின்னே நாயனார் விடைமொழிந்து தமது கருத்தினை உணர்த்தும் நிலை கண்டுகொள்க. "கைதொழு தவருமுன்னிற்ப" (2555);

44

3704. (வி-ரை) பூதி அணி சாதனத்தவர்......போதேன் - பூதி அணி சாதனந்தவர் - திருநீறணிந்த சிவனடியார்கள்; சாதனம் - சிவசாதனம்; அணி - அணி