624திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

கடிதமைத்து - என்றதனாலும் இவரது மரபின் உணவு வழக்கம் புலப்படுமாறு காண்க. இங்கு, இறைவர் கண்டு, உலகுக்குக் காட்டி யுய்யச் செய்யப் போந்த உண்மையாவது, பசு மாம்சப் புலால் உணவுபற்றிய தன்மையன்று; உலக நிலையில் மக்கள்பாற் கொள்ளும் திணிந்த பற்றுச் சிவன் அடியார் பணியின் முன் நில்லா தொழியும் பேரன்பு மீதூர்ந்த நிலையேயாம் என்க.
காலம் தப்பாமே - காலம் - உணவு கொள்ளுதற்குரிய காலம்; "உரிய நாளும் அதற்கு இன்று" என்று உத்திராபதியார் உணவு கொள்ளும் காலம் குறித்தாராதலின் அந்நியமம் தவறாமே என்க.

49

3709
ண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்,
"நண்பு மிக்கீர்! நாமுண்ணப் படுக்கும் பசுவு நரப்பசுவாம்;
உண்ப தஞ்சு பிராயத்துள் ளுறுப்பின் மறுவின் றேலின்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற் போலும் புகல்வதொன்" றென்றார்.

50

(இ-ள்) பண்பு.....கண்டு - அடிமைப் பண்பின் மிகுந்த சிறுத்தொண்டரது அன்பினைக் கண்டு; பயிரவரும் - பயிரவச் சங்கமராகி வந்த இறைவரும்; நண்பு மிக்கீர்! ....ஒன்று என்றார் -அடியவர்பால் அன்பு மிகுந்தவரே! நாம் உண்பதற்குச் சேதிக்கப்படுகின்ற பசுவும் மானிடப் பசுவாகும்; அஞ்சு வயதாயும் உறுப்பில்மறு இல்லையேல் நாம் உண்பது; நோய் செய்யும் புண்ணிலே வேலினைப் பாய்ச்சி யதுபோல மேலும் சொல்லலாவது ஒன்று உண்டு என்றார்.
(வி-ரை) இது நீர் உண்ணும் பசு இன்னதென்று அருள்வீர் என்று விண்ணப்பித்த தொண்டருக்கு உத்தராபதியார் கூறும் விடை.
உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம் - உண்ண - உண்ணும் பொருட்டு உண்பதற்காக! படுத்தல் - சேதித்தல், கொல்லுதல்; நரப்பசு - மனித வகையுள்ளேபட்டது.
அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் உண்பது - அந்த நரப்பசுவின் இலக்கணம் கூறுகின்றார். அஞ்சு - ஐந்து என்பதன் மரூஉ; பிராயம் - வயது.
உறுப்பில் மறு - மறு அங்கங்களிற் கேடு, குற்றம் முதலியவை; குறை இன்றேல் - உண்பதாம் - என்க; வெளியில் காணும் மறு வடு முதலியவை உள்ளே உள் தசையினும் அவ்வவற்கு ஏற்ற குறைவாடுகளை உளதாக்குவன என்பது உடற்கூற்று நூலார் துணிபு; இது புலாலுண்போர் பார்க்கும் உண்மைகளுள் ஒன்று.
நோ(தல்) செய் புண்ணில் என்று விகுதி பிரித்து மாற்றிப் பொருள் கொள்க. முன்னமே நோதலைச் செய்யும் புண்ணினுள்; வேல் எறிதல் - வேலினாற் குத்துதல்.
புண் செய்.....போலும் - இஃது உவமை; புண்ணின் நோய் ஒன்றும், அதன் மேலும் அதனுள் வேலெறிதலால் உளதாம் நோய் மற்றொன்றும் ஆக மிகத் துன்பந்தரும் இருநிலைகள் ஒன்றன்மேல் ஒன்றாக மிகுதல் உவமை. ஈண்டு நரப்பசு - ஐந்து பிராயம் - மறுவிலா உறுப்பு என்றவை நோவு செய்யும் புண்ணாக உவமிக்கப்பட்டன, இனி, மேல்வரும் பாட்டில்; ஒரு குடிக்கு நல்ல ஒரு மகனைத் தாய் பிடிக்கத் தந்தை தம்மில் உவந்து அரிந்து அமைத்தல் அப்புண்ணில் கூரிய வேலினை எறிவதாக உவமிக்கப் படுதல் கண்டு கொள்க. "நின்சிறுவர் நால்வரினுங் கரிய செம்மல் ஒருவனைத்தந் திடுக"என, "அருந்தவத்தோன் (விசுவா மித்திரன்) இயம்பிய சொல் மருமத்தி னெறிவேல் பாய்ந்த, புண்ணிலாம் பெரும்புழையிற் கனனுழைந்தா