| |
| ஒருவனாகி.....வணங்குதல் - ஒரு குடிக்கு ஒரே மகனாகி வரும் அந்தச் சிறுவனை நாம் பெறுவது எவ்வாறு? என்று சொல்லி வணங்குதலும், |
| 55 |
| 3715. (இ-ள்) மனைவியார் தம் முகநோக்கி - (அதுகேட்ட நாயனார்) மனைவியாரது முகத்தினை நோக்கி; மற்றித் திறத்து....உளரே - மற்று இத்தன்மை வாய்ந்த மைந்தர்களை அவ்வவர் எண்ணம் நிரம்பும் அளவு நிதியம் கொடுத்தால் கொடுப்பாரும் உளராவர்; நேர் நின்று....இல்லை (ஆனால்) நேரே எதிரில் நின்று தமது மைந்தனைத் தந்தையும் தாயரும் அரிவார்கள் (இவ்வுலகத்தில்) இல்லை; தாழாதே........யான் என்றார் -(ஆகையினால்) இனியும் தாமதிக்காமல் இங்கு என்னை உய்யச் செய்தற்கு நீபெற்ற மகனைநாம் (இதன் பொருட்டு) அழைப்போம் என்று கூறினார். |
| 56 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3714.(வி-ரை) இது மாதவர் கருத்தினை நாயனார் கூறக்கேட்ட மனைவியார் சொல்லியது. தாய்த்தன்மையின் தண்ணளி கூர்ந்தறிந்த அம்மையாராதலின் "ஒருவனாகி வரும் அச்சிறுவனைப் பெறுவ தெவ்வாறு?" என்ற ஒன்றே தமது உள்ளத்தில் முன்வந்து நிற்கப்பெற்று வினவியபடி; அதன்மேல் அரிய வினை செய்யும் நிலையளவு அவர் மனம் மேற்சென்றிலது; ஆனால், மனத்திண்மை பெற்றாராதலின், நாயனார் உள்ளம் அதன்மேலும் அவ் அரிய வினையின்பாற் சென்று அது பிறரெவர் பாலும் எவ்வாற்றானும் கிடைத்தற் கருமையினை எண்ணித் தாமே துணிந்தமை மேல்வரும் பாட்டிற் கூறப்படுதல் காண்க; அடியாரை ஊட்டும் அன்பின்றிறம் இவ்விருவர் பாலும் ஒன்றுபோல நிகழப்பெறினும் உலகியலிற் பெண்பாலாரின் அன்பின் றிறமும் ஆண்பாலாரின் அவ்வன்பினுடன் திண்ணிய உறைப்பின் றிறமும் ஈண்டு விளங்கக்கிடத்தல் கண்டு கொள்க. |
| அமுதமைப்போம் - அமைப்போமாகிய; அமைக்க ஒருப்பட்டோ மாகியயாம்; வினைப்பெயர். அமைப்போமாகிய யாம் பெறுவ தெவ்வாறு? என்று கூட்டுக; வினைமுற்றாகவே கொண்டு உரைத்தனர் முன் உரைகாரர். |
| என்று வணங்குதலும் - அதுகேட்டு - என்றார் என வரும் பாட்டுடன் முடிக்க. |
| 3715. (வி-ரை) மற்றித் திறத்து......உளரே - மற்று - உலகியலுக்கு மாறு பட்ட என்பதாம். ஏகாரம் - தேற்றம். |
| நினைவு நிரம்ப - தாம் எண்ணிய அளவும் நிரம்ப; மனம் நிரம்ப எனினுமாம். |
| உளரே - உளராவர்; ஏகாரம் - இதனைச் செய்வாரும் உளராவர் என்று சிறப்பின் கண் வந்தது. |
| நேர் நின்று - நேரே முன்னர் நின்று; மைந்தனைப் பிறர் அரிய நேரிடினும் அப்போது நேர் நிற்றலும் பெற்றோர்க்கரிது என்பதாம். |
| அரிவார் இல்லை - இவ்வுலகில் இல்லை; ஆதலின் என்பது குறிப்பெச்சம். |
| உய்ய - உய்யச் செய்ய - உய்விக்க என்ற பிறவினை விவ்விகுதி தொக்குத் தன்வினையாய் வந்தது. |
| எனை உய்ய - என்னை உய்விக்கும் பொருட்டு; உய்யப் பயந்தான் என்க. எனை என்று ஒருமையாற் கூறினார் தாம் உய்வதனால் நாயகநாயகி நிலைமையாம் அம்மையாரும் உய்வதற் கேதுவாதல் பற்றி; நீ பயந்தான் - எனது உய்தி நீ பயந்ததனாலாயிற்று என்று அவரையும் உளப்படுத்தியவாறு மாயிற்று; நான் இங்குய்ய நீ பயந்தோனை. |
| அழைப்போம் - இக்காரியத்தில் பயிரவர்க்குத் திருவமுதாக்கப் பசுவாய்ப்பயன்படுவதற்காக என்பது குறிப்பெச்சம் அழைப்போம் யாம் - என்று தம்மோடு |