|
  |  |  | 
  |  | பொருளினை - என்பதும் பாடம். தாருகன் வதமும், காமனை எரித்ததும் குறிக்கப்பட்டன.  கரும்புனை - மிகப் பசிய புன்னை மரங்கள். புன்னை - புனை என வந்தது இடைக்குறை;   புனை...காட்டும் - தன்மை யணியினை உள்ளுறுத்த உருவகம். முத்து - முத்துப்போன்ற   மொட்டு; பொன் - தாது; பவளம். பூவின் உள்ளிருக்கும் செவ்விய இளங்கொட்டை;   "பொன்னவிழ்ப்பனமலர்ப் புன்னை" (1113);-(10) முன்னாள் - அயன் - வழிபாடு செய்ய   இருந்த - தலவரலாறு குறித்தது; கண் - கணுக்கள்;- (11) காமரம் - சீகா   மரப்பண். நிறைநீர் - முன் கூறியவை எல்லாம் நீர்ச் சிறப்புப் பற்றியன என்று முடித்துக்   காட்டியவாறு. இச்சிறப்பு வெள்ளக் காலத்தில் இன்றும் காணவுள்ளது; நண்பு - சிவன் பாலன்பு   என்ற பொருளில் நின்றது; சிவனே எஞ்ஞான்றும் உயிர்களுக்கு நண்பு செய்து எடுப்பவன் என்றறிந்து,   என்றும் ஏனை நட்புக்கள் எல்லாம் அழியத் தக்கன என்பதும் கண்டு என்றும் அந்நண்பினையே பிடித்து   அவ்வழிபாட்டிற் சிறந்த என்க. "மாதொரு பாகனார்க்கு..மேம்படு சடையனார்" (149); நண்புடைய   என்றதனை இசை ஞானி ஆரூரன் என்பவற்றுடனும் கூட்டுக. இங்கு நம்பிகள் தமது தந்தை, தாய்,   வயது (சிறுவன்), ஊர், பேர், பண்பு முதலிய எல்லாம் ஒருசேரப் பெறவைத்த சிறப்புக் காண்க.  பண்பயிலும் - இறைவனது பண்பும் அவன் வெளிப்பட இருக்கும் பதியின் பண்பும் பலவாறு பயிலக்காட்டும். | 
  |  | தலவிசேடம் :- திருக்கலயநல்லூர் - காவிரித் தென்கரை 68-வது பதி; இப்போது   சாக்கோட்டை என வழங்கப்படுகின்றது; உயிர்களை அடைத்த கலயம் (கும்பம் - குடம்) நீர்ப்   பெருக்கு ஊழியில் தங்கிய இடமாதலின் இப்பெயர் பெற்ற தென்பர்; நீர்வளமுள்ள அரிசிலாற்றின்   தென்கரையில் உள்ள தென்பது பலபடியாலும் பதிகத்துப் பாராட்டப்பட்ட பெருமையுடையது; பதிகத்துள்   இறைவரது அருளிப்பாடாகிய மெய்ம்மைப் புராணம் பலவும் விரிவாய்ப் பதிகப்பாட்டுக்களிற்   போற்றப்பட்ட பெருமையும் மறையவர்கள் வாழும்பதி என்பதும் பதிகத்துப் பாராட்டப்பட்ட   பெருமையும் உடையது. சுவாமி - அமிர்தகலாநாதர்; அம்மை - அமிர்தவல்லி - பதிகம்; | 
  |  | இது கும்பகோணம் நிலையத்துக்குத் தெற்கே நீடா மங்கலம் கற்சாலை வழியில் 2 நாழிகையில்   அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது. | 
  |  | குறிப்பு :- பூசையின் பொருட்டு அரி (விட்டுணு) சொல்லின் வழி வந்தமையால் அரி   சொல் ஆறு எனப் பெயர் பெற்றதென்றும் இப்போது மருவி அரிசிலாறு என வழங்குவதென்றும் கூறுப. | 
  | 3222 |                       | அங்கு நின்று திருக்குடமூக் கணைந்து         பணிந்து பாடிப்போய், மங்கை பாகர் வலஞ்சுழியை மருவிப் பெருகு மன்புருகத்
 தங்குகாத லுடன்வணங்கித் தமிழாற் பரசி, யரசினுக்குத்
 திங்கண் முடியா ரடியளித்த திருநல் லூரைச் சென்றணைந்தார்.
 |  | 
  |  | 68 | 
  |  | (இ-ள்.) அங்கு...போய் - அப்பதியினின்றும் திருக்குட முக்கினை அணைந்து வணங்கித்   திருப்பதிகம் பாடிச் சென்று; மங்கை...பரசி உமைபாகராகிய இறைவரது திருவலஞ் சுழியினைச்   சார்ந்து, பெருகும் அன்பு உள்ளத்தினை உருகச் செய்ய நிரம்பிய பெரு விருப்பத்துடன் வணங்கித்   தமிழ்ப் பதிகத்தினாலே போற்றி செய்து; அரசினுக்கு...சென்றணைந்தார் - மதியினைச் சடையில்   அணிந்த பெருமானார் திருநாவுக்கரசருக்குத் திருவடியினைத் சூட்டியருளிய திருநல்லூரினைச் சென்று சேர்ந்தருளினர். |