642திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

அடியேனது விருப்பம் நிறைவேறும்படி எழுந்தருள வேண்டும்" என்று கூறி, மேலும் உரைப்பாராகி,

68

3728. (இ-ள்) இறையும்.......இறைஞ்ச - இனிச் சிறிதும் தாழ்க்காது தேவரீர் எழுந்தருளித் திருவமுது செய்தருளுதல் வேண்டும் என்று கூறி வணங்க; கறையும்.....காட்டாதார் - கண்டத்திலே விடத்தின் கருமையினை மறைத்தும் நுதலில் உள்ள கண்ணினையுங் காட்டாது மறைத்தும் வந்தவராகிய இறைவர்; நிறையும்.....போதும் என்ன -நிறைவாகும் பெருமை பொருந்திய சிறுத்தொண்டரே! போதும் என்று அருள; நிதியிரண்டும்.....மனைபுகுந்தார் - வறியவன் ஒருவன் இரண்டு நிதிகளையும் ஒருங்கே பெற்றுவந்தாற்போல உடன் அழைத்துக் கொண்டு தமது மனையினிற் புகுந்தனர்.

69

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3727. (வி-ரை) பரிவு பண்ணினேனாய் - பரிவு - அன்பு; பரிவு......தாழ்த்தது - உமது பசி தீர்க்க வேண்டு மென்று பரிந்து கொண்டதனால் அதற்கு நீர் இணங்கி நிற்க, அதற்கு மாறாகப் பசியினை அதிகப்படுத்திய செயலேயாய்க் காலம் தாழ்த்தது.
எனினும் - என்றது, காலத்தாழ்வாயினும் காரியம் நிறைவேறியது ஆறுதல் என்பது குறிப்பு.
பணி சமைத்தேன் - பணி - பணித்தபடி; கட்டளையிட்டபடி; அமுதூட்டும் திருப்பணியாக என்ற குறிப்புமாம்.
எண்ணம் வாய்ப்ப - தேவரீரை எவ்வாற்றாலும் திரு அமுதூட்டுதல் வேண்டுமென்ற அடியேனது எண்ணம் நிறைவேறும் பொருட்டு; தேவரீர் எங்களை யாட்கொள்ளச் சங்கற்பித்து எழுந்தருளிய திருவுள்ளக் கருத்துப்படி அருள் எங்களுக்கு வாய்க்கும் பொருட்டு என்ற பிற்சரித விளைவின் உண்மைக் குறிப்புமாம்.
உரைப்பாராகி - இறைஞ்ச - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க; உரைப்பார் - முற்றெச்சம்.

68

3728. (வி-ரை) இறையும் - ஒரு சிறிதும்.
கறையும்.....காட்டாதார் - இறைவர் காட்டி வந்தருளிருய திருவடிவக்குறிப்பு; கறையும் கண்டத்தினின் மறைத்து - இதனை முன் (3689) விரித்தருளியதனை ஈண்டு நினைவு கூர்க. வயிரவர், தலையினின்று திருவடிவரையும் கொண்ட திருவேடத்தினை (3685 முதல் 3694) பத்துத் திப்பாட்டுக்களால் விரித்துக் கூறிக்காட்டித் தரிசனம் செய்வித்தருளினாராதலின் ஈண்டு அவற்றை நினைவுகூர்தற் பொருட்டு அவற்றுட் சிறந்த தொண்டு நிலைகளைக் காட்டுவித்தருளுகின்றார்; மறைத்து - "விட மறைத்தருள" (3689); விடத்தினை மறைத்து அமிழ்தக் குமிழி நிறைத்தனர் எனக் கூறிய குறிப்பின்படித், திருநீலகண்டம், "வெவ்விட முன்றடுத்தெம் மிடர் நீக்கிய வெற்றியினா, லெவ்விடத் தும்மடி யாரிடர் காப்பது கண்ட மென்றே" (2233) என்றபடி அருள் புரிவதற் கடையாளமாம்; திருநீலகண்ட நாயனார்புராணம் பார்க்க. (363); கறையும் - கண்ணும் - உம்மைகள் எண்ணும்மைகள்.
கண்ணும் நுதலிற் காட்டாதார் - நெற்றிக் கண்ணை மறைத்து வந்தவர் என்பது; காட்டாதார் - வெளியே தெரியாது மறைத்தவர்; "திருநுதன்மேற் றிருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க" (3687); திருநீலகண்டம் மறைந்தமை பொதுவும், நுதற்கண் மறைத்தமை சிறப்பும் ஆகிய அருட்குறிப்புக்கள் பெறஇவற்றை ஈண்டு விதந்து எடுத்தோதியருளினர். நுதற்கண்ணின் அருள் இச்சரித