|
  |  |  | 
  |  | (வி-ரை.) திருக்குடமுக்கு - திருவலஞ்சுழி - திருநல்லூர் - நம்பிகள் யாத்திரையாகச் சென்றருளிய   வழி குறிக்கப்பட்டது. | 
  |  | தங்குகாதல் - நிலைபெற்று மாறாத பெரு விருப்பம்; தங்கு - அப்பதியிற்றங்கும் என்றலுமாம். | 
  |  | தமிழ் - தேவாரத் திருப்பதிகம்; தமிழாற் பரவி - நம்பிகள் வேதாகமங்களாலும் பரவிப்   போற்றலாமாதலின் அதனிற் பிரித்துணரத் தமிழால் என்றார். இயல்பு குறித்த தென்றலும். | 
  |  | அரசு - திருநாவுக்கரசர்; அரசினுக்கு...அடியளித்த - வரலாறு அவர் தம்புராணம் (1459 -1461)   பார்க்க. | 
  |  | திங்கள் முடியார் - வேண்டுவார் வேண்டிய ஈயும் திருவருளுடைமை குறிப்பு. | 
|  | திருக்குடமுக்கு திருவலஞ்சுழி திருநல்லூர் - இம்மூன்று பதிகளுக்கும் நம்பிகளது பதிகங்கள் கிடைத்தில. | 
|  | 69 | 
  | 3223 |                       | நல்லூ ரிறைவர் கழல்போற்றி நவின்று நடுவு நம்பர்பதி எல்லா மிறைஞ்சி யேத்திப்போந் திசையாற் பரவுந் தம்முடைய
 சொல்லூ தியமா வணிந்தவர்தஞ் சோற்றுத் துறையின் மருங்கெய்தி
 அல்லூர் கண்டர்கோயிலினுள்ளடைந்துவலங்கொண்டடிபணிவார்.
 |  | 
  |  | 70 | 
| 3224 |                       | "அழனீ ரொழுகி யனைய"வெனு மஞ்சொற் பதிக         மெடுத்தருளிக் கழனீ டியவன் பினிற்போற்றுங் காதல் கூரப் பரவியபின்
 கெழுநீர் மையினி லருள்பெற்றுப் போந்து பரவை யார்கேள்வர்
 முழுநீ றணிவா ரமர்ந்தபதி பலவும் பணிந்து முன்னுவார்,
 |  | 
  |  | 71 | 
| 3225 |                       | தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து         திருவை யாறதனை மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
 சேவில் வருவார் திருவாலம் பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
 பாவு சயனத் தமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்,
 |  | 
  |  | 72 | 
| 3226 |                       | "மழபா டியினில் வருவதற்கு நினைக்க மறந்தா         யோ"வென்று குழகா கியதங் கோலமெதிர் காட்டி யருளக் குறித்துணர்ந்து
 நிழலார் சோலைக் கரைப்பொன்னி வடபா லேறி நெடுமாடம்
 அழகார் வீதி மழபாடி யணைந்தார் நம்பி யாரூரர்.
 |  | 
  |  | 73 | 
  |  | 3223. (இ-ள்.) நல்லூர்...நவின்று - திருநல்லூர்ப் பெருமானது திருவடிகளைத் துதித்துப்   பாடி; நடுவு...போந்து - இடையிலே உள்ள இறைவர் பதிகள் எல்லாவற்றையும் வணங்கித் துதித்துச்   சென்று; இசையால்....எய்தி - தமிழிசையினாலே துதிக்கின்ற தமது பதிகங்களைப் பயனாக   விரும்பி ஏற்று அணிந்துகொண்டருளிய இறைவரது திருச்சோற்றுச் துறையின் பக்கத்திற் சேர்ந்து;   அல்லூர்...பணிவார் - விடந்தங்கிய கண்டராகிய சிவபெருமானது திருக்கோயிலினுள்ளே அடைந்து   வலமாகச் சூழ்ந்து வந்து திருவடிகளிற் பணிவாராகி. | 
  |  | 69 | 
  |  | 3224. (இ-ள்.) அழனீர்...எடுத்தருளி - "அழனீர் ஒழுகியனைய" என்று அழகிய   சொற்களாலாகிய திருப்பதிகத்தினைத் தொடங்கியருளி; கழல்...பரவிய பின் - திருவடிகளைப்   பெருகிய அன்பினாலே துதிக்கின்ற பெருவிருப்பம் மேலும் மிகும்படி போற்றியபின்; கெழு...போந்து   - உரிமையாகிய தன்மையில் இறை |