[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்69

முழு நீறு - முழுமையும் வீந்த காலத்திற் பெறும் சங்கார காலத்து நீறு; முழுமையைத் தரும் நீறு என்ற குறிப்புமாம்.
பதி பலவும் - சோற்றுத்துறையின் அணிமையில் உள்ளவை; தண்டங்குறை - திருவேதிகுடி முதலாயின என்பது கருதப்படும்.

70

3225. (வி-ரை.) பாவு சயனம் - பாவுதலாவது உடல் முழுதும் பரப்ப நிலத்தில் கிடத்தியமர்தல். கைகால் முதலியவற்றை முடக்கிப் பள்ளிகொள்ளுதல் உடல் நலத்துக் கியைவதன்று என்பது மருத்துவநூற் கருத்து; பாவு சயனம் - பரப்பிய படுக்கை என்றலும் ஆம்.
தேவர்பெருமான்றிருப்பழனத் திருவையாறு நெய்த்தானம் - என்பதும்பாடம்.
3226. (வி-ரை.) நினைக்க மறந்தாயோ? - வருவதற்கு மறந்தாயோ என்றலே அமையுமாதலின் நினைக்க மறந்தாயோ? என்ற தென்னை யெனின்; நம்பிகள் சிவயோக நிலையினராகி எஞ்ஞான்றும் "பேரா வொழியா மறவாநினையா" என்றபடிக்குள்ள தன்மையுடையராதலின் மறப்பிலர்; நினைப்பின் நீக்கமே மறத்தலாம்; ஆதலின் மறந்தாயோ என்பது பொருந்தாமையின் இங்குக் குறித்தது மழபாடியில் வருதலாகிய சிறப்பு நினைவேயாம் என்பார் நினைக்க என்றார் என்க. "யாரை நினைக்கேனே" என்ற பதிக விளக்கமும் சரிதச் சான்றும் ஆம்.
குழகு - இளமை; அழகு என்றலுமாம். குழகாகிய தம்கோலம் - என்றும் மாறாது ஒருபடித்தாய் நிற்கும் தமது இன்பமயமாகிய திருக்கோலம்; பதிகத்துப் "பொன்னார் மேனியனே" என்பது முதலாகத் தொடங்கிப், பலபடியும் பாராட்டப்பட்டது. இக்கோலம் எதிர் காட்டக் கண்ட காட்சியின் குறிப்பு. காளையாந் திருவடிவங் காட்டி, "யாமிருப்பது கானப்பேர்" என்று அருளியதும், அத்திருப் பதிகமும் இங்கு நினைவு கூர்தற்பாலன.
குறித்து உணர்ந்து - குறித்தலாவது கனா நிகழ்ச்சிகளுட் பல நனவின்கண் செவ்விதின் வாராது போதலின் அவ்வாறின்றி அம்முழுமையும் நனவின் வருமாறு குறி வைத்துத் துயிலுணர்தல்.
பொன்னி வடபால் ஏறி - காவிரியின் தென்கரை வழியே உள்ள தலங்களை வழிபட்டுத் திருவாலம் பொழிலிற் சேர்ந்தாராதலின். அங்கிருந்து மழபாடிக்கு வடக்கு நோக்கிக் காவிரியையும் கொள்ளிடத்தையும் தாண்டிச் சென்று; கொள்ளிடம் காவிரியின் பிரிவுகளுள் ஒன்றாதலின் வேறு பிரித்துக் கூறாது பொன்னி வடபால் என்றமைந்தார்; பால் - பக்கம். வட பக்கமுள்ள இரண்டு கிளையாறுகளையும் குறித்தது.

72

3223. நடுவு நம்பர்பதி -இவைகட்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில!
திருச்சோற்றுத்துறை
திருச்சிற்றம்பலம் பண் - கௌசிகம் 7-ம் திருமுறை
அழனீ ரொழுகி யனைய சடையும், உழையீ ருரியு முடையா னிடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையும், சுழனீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.

(1)

இலையா லன்பா லேத்து மவர்க்கு, நிலையா வாழ்வை நீத்தா ரிடமாந்
தலையாற் றாழுந் தவத்தோர்க்கென்றுந், தொலையாச் செல்வச்
சோற்றுத்துறையே.

(9)

சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுண், முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றா ரடியா ரடிநா யூரன், சொற்றா னிவைகற் றார்துன் பிலரே.

(10)

திருச்சிற்றம்பலம்