[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்7

தங்கணயகர்.....புரிந்தார் - தாம் சிவனுக்குத் தொண்டு பூண்டொழுகியதுடன் சிவனடியார்கள் பணியினை அதனினும் மிக்க அன்புடன் விரும்பிச் செய்தனர் என்பது. சார்ந்து - சார்பாகக் கொண்டு. பொங்குதல் - மேன்மேல் அதிகரித்தல். போற்றுதல் - விரும்பி மேற்கொள்ளுதல். புரிதல் - இடைவிடாது நினைத்தல் - சொல்லுதல் - செய்தல். இதனால் இந்நாயனார் சிவபத்தியேயன்றிச் சங்கம பத்தியிலும் சிறந்தவர்என்பதும், அவ்விரண்டனுள்ளும் அடியார் பணியே சிறக்க மேற்கொண்டொழுகினர் என்பதும் கூறப்பட்டன. இவர் வழிவழி சிவனடிமையிற் சிறந்தொழுகினர் என்பது மேல் (3546) கூறப்படுதல் காண்க.

கலிக்காமர் என்பார் - உள்ளார் என்க: எழுவாய் பின் வைக்கப்பட்டது. அவரது அடியார்க்கடியராந் தன்மையை முடித்துக் காட்டுதற் பொருட்டு.

6

3161
புதிய நாண்மதிச் சடைமுடி யார்திருப் புன்கூர்க்
கதிக மாயின திருப்பணி யனேகமுஞ் செய்து,
"நிதிய மாவன நீறுகந் தார்கழ" லென்று
துதியி னாற்பர வித்தொழு தின்புறு கின்றார்,

7

3162
நாவ லூர்மன்னன் நாதனைத் தூதுவிட் டதனுக்
"கியாவ ரிச்செயல் புரிந்தன!" ரென்றவ ரிழிப்பத்
தேவர் தம்பிரா னவர்திறந் திருத்திய வதற்கு
மேவ வந்தவச் செயலினை விளம்புவா னுற்றேன்.

8

3161. (இ-ள்.) புதிய....செய்து - புதிதாய் முளைத்த இளஞ்சந்திரனைச் சூடிய சடை முடியினையுடைய சிவபெருமானது திருப்புன்கூருக்கு மேலாள் அனேகந் திருப்பணிகளையும் செய்து; நிதியமாவன.......இன்புறுகின்றார் - திருநீற்றை விரும்பிய சிவபெருமானது திருவடியே தமக்குச் செல்வமானது என்று துதிகளாற் போற்றி வணங்கி யின்பமடைகின்றாராகிய அக்கலிக்காமனார்,

7

3162. (இ-ள்.) நாவலூர்....தூது விட்டதனுக்கு - திருநாவலூர்த் தலைவராகிய நம்பியாரூரர்சிவபெருமானைப் பரவையார்பால் தூதாக அனுப்பியதனுக்கு; யாவர்...இழிப்ப - இவ்வாறு செயல் செய்வோர்யாவர்! என்று அவர்குறைகூற; தேவர்தம்பிரான்......திருத்திய - தேவ தேவராகிய சிவபெருமான் அவரது அக்கருத்தினைத் திருத்தும் பொருட்டு; அதற்கு.....உற்றேன் - அதற்குப் பொருந்த வந்த அவ்வருட்செயலின் வரலாற்றினைச் சொல்லப் புகுகின்றேன்.

8

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண் டுரைக்க நின்றன.
3161. (வி-ரை) புதிய நாண்மதி - புதிய மூன்றாம்பிறைச் சந்திரன். அமாவாசை மறைவினின்றும் அன்று மீளத் தோன்றுதல் கருதிப் புதிய என்றார். நாள் - இளமை குறித்தது. புதிய நாள் - ஒருபொருட் பன்மொழி. இளமையின் மிகுதி குறித்தது. திருப்புன்கூர்க்கு அதிகமாயின திருப்பணி அநேகம் செய்தல் என்றது - அப்பதியில் எழுந்தருளிய இறைவருக்கே யன்றி அப்பதியினுக்கும் என்ற குறிப்பு: அதிகமாயின - அநேகம் என்ற பன்மையும் இக்குறிப்பு ஒரு காலத்தில் மழை மறுத்து நாடு வருந்தக் கண்டு ஏயர்கோனார்மழையினை வேண்டிப் பன்னிரு வேலி நிலம் தந்து இறைவர்பாற் குறையிரந்து இங்கு வரங்கிடக்க, இறைவரரு