|
  |  |  | 
  |  | பதிகக் குறிப்பு :- இறைவரது இடம் சோற்றுத்துறையே. இதனுள் இறைவரது இலக்கணங்கள்   பலவும் பேசப்பட்டன. (பிள். திருநெல்லிக்கா - பார்க்க). | 
  |  | பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அழல்நீர் ஒழுகி அனைய சடை - நெருப்பே உருகி நீர்போல்   ஒழுகினாற்போலும் சிவந்த சடை; செஞ்சடை; உழை - மான்; கழை - கரும்பு;   கழைநீர் முத்து - கரும்பினின்றும் விளையும் நீர்மையுடைய முத்து; சுழல் நீர் -   சுழலும்படி அலைத்து வரும் நீர்;-(2) பண்டை வினைகள் - மூல கன்மங்கள் முதலிய பழவினைகள்;  இடையறாத அன்பு - இடையில் எக்காலமும் அறுதலில்லாத அன்புடைய;- (3) ஆலும் -   அசைந்தாடும்;-(4) பளிக்குத்தாரை போல் நூல் - பவளம்போற் றிகழும்; மார்பில்   பூணூல் வளைந்து கிடத்தல் பவள மலையிற் பளிங்குத் தாரை கிடந்ததுபோல உள்ளதென்பது; உரு உவமம்;-(5)   கூற்றுக்கு உதையும், ஒல்கா விதிக்கு வதையும் செய்த என்க. ஒல்குதல் - வளைதல். ஈண்டுத்   தலைவணங்குதல் குறித்தது; விதி - படைத்தற்றொழிலுடைய பிரமன்; விதித்தல்   - படைத்தல்; விதி செய்பவனை விதி என்றார்; வதை - சிரங்கிள்ளுதல்; மைந்து   - வல்லமை; திதையும் - செறியும்;-(6) பேதை - பேதையாகிய (பெண்) அம்மையைப்   பாகமுடைய; பேதைமையுடை என்றலுமாம்; பேதைமையாவது கடலில்வந்த அமிர்தத்தைத் தாம் உண்ணாது   அமரருக்கு ஈந்து, விடத்தைத் தாம் எடுத்து உண்டமை; எரியைக் காலும் - எரிபோன்ற தளிர்களைக்   காட்டித் தழைகின்ற; சூதம் - மா; - (7) சிறந்தார்.....துறந்தார் - பற்றுக்களை   விட்டோர்;-(8) ஓமக்கனல் - ஓமத்தில் எழுந்து அவியுண்பது போன்று உண்ட என்பது   குறிப்பு; சேக்கை - பள்ளியறை;-(9) இலை - அருச்சிக்கும் தழை; நிலையா   வாழ்வை நீத்தார் என்றதனால் நிலைத்த பெருவாழ்வு தருபவர் என்பது குறிப்பு; தொலையாச்   செல்வம் - அளவில்லாத சிவச் செல்வம்; அற்றார் அடியார் - வேறு பற்று அற்றவர்களாகிய   அடியவர்கள். | 
  |  | தலவிசேடம் :- திருச்சோற்றுத்துறை - III - பக். 335 பார்க்க. | 
  |  | 3224. பதிபலவும் - நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில! | 
|  | திருக்கண்டியூர் - திருப்பூந்துருத்தி - திருவாலம்பொழில் - இவற்றிற்கு நம்பிகள் பதிகங்கள்   கிடைத்தில! | 
|  | திருவையாறு - நம்பிகள் இந்த யாத்திரையிற் பாடியருளிய பதிகமும் கிடைத்திலது!   "பரவும் பரிசு" என்ற பதிகம் பின்னர் அருளப்பட்டது. (3881 = கழறிற் - புரா - 134   பார்க்க.) | 
  | 3227 |                       | அணைந்து திருக்கோ புரமிறைஞ்சி யன்பர்         சூழ வுடன்புகுந்து பணங்கொ ளரவ மணிந்தார்முன் பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
 குணங்கொ ளருளின் றிறம்போற்றிக் கொண்ட புளகத்துடனுருகிப்
 புணர்ந்தவிசையாற்றிருப்பதிகம் "பொன்னார்மேனி"யென்றெடுத்து,
 |  | 
  |  | 73 | 
  | 3228 |                       | "அன்னே யுன்னை யல்லாலியா னாரை நினைக்கே"         னெனவேத்தித் தன்னே ரில்லாப் பதிகமலர் சாத்தித் தொழுது புறம்பணைந்து
 மன்னும் பதியிற் சிலநாள்கள் வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து
 பொன்னிக் கரையி னிருமருங்கும் பணிந்து மேல்பாற் போதுவார்.
 |  | 
  |  | 74 | 
  | 3229 |                       | செய்ய சடையார் திருவானைக் காவி         லணைந்து திருத்தொண்டர் எய்த முன்வந் தெதிர் கொள்ள விறைஞ்சிக் கோயி லுட்புகுந்தே
 |  |