| |
| ஐயர் கமலச் சேவடிக்கீ ழார்வம் பெருக விழுந்தெழுந்து மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார். | |
| 75 |
3230 | "மறைக ளாய நான்கு"மென மலர்ந்த செஞ்சொற் றமிழ்ப்பதிகம் நிறையுங் காத லுடனெடுத்து நிலவு மன்பர் தமைநோக்கி "இறையும்பணிவா ரெம்மையுமா ளுடையா"ரென்றென் ரேத்துவார் உறையூர்ச் சோழன் மணியாரஞ் சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி, | |
| 76 |
3231 | வளவர் பெருமான் மணியாரஞ் சாத்திக் கொண்டுவரும்பொன்னிக் கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற அளவி றிருமஞ் சனக்குடத்து ளதுபுக் காட்ட வணிந்தருளித் தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் | |
| 77 |
| 3227. (இ-ள்.) அணைந்து....புகுந்து - சேர்ந்து திருக்கோபுரத்தை வணங்கி அன்பர்கள் உடன் சூழ்ந்துவரத் திருக்கோயிலின் உள்ளே புகுந்து; பணங்கொள்...வீழ்ந்து - படத்தினையுடைய பாம்பினை அணிந்த இறைவரது திருமுன்புபணிந்து நிலமுற வீழ்ந்து எழுந்து; பரங்கருணை....எடுத்து - அளக்கலாகாத கருணைத் தன்மையினை உட்கொண்ட பேரருளின் திறத்தினைத் துதித்துத் திருமேனி முழுதும் மயிர்க்கூச்செறிய உள்ளமுருகி இசையுடன் கூடிய திருப்பதிகத்தினைப் "பொன்னார், மேனி" என்று தொடங்கி, |
| 73 |
| 3228. (இ-ள்.) அன்னே...புறம்பணைந்து - "அன்னே! உன்னையல்லாலினி யாரை நினைக்கேன்" என்று துதித்து ஒப்பற்ற பெருமையினையுடைய பதிகமாலையினைச் சாத்தி வணங்கிப் புறத்தே அணைந்து; மன்னும்...மகிழ்ந்து - நிலைபெற்ற அத்திருப்பதியில் சிலநாள்கள் எழுந்தருளித் திருத் தொண்டர்களுடன் கூடி மகிழ்ந்தருளி; பொன்னிக் கரையின்....போதுவார் - காவிரியின் கரையில் இரண்டு பக்கமும் உள்ள பதிகளைப் பணிந்து மேற்குத் திசை நோக்கிச் செல்வாராகி; |
| 74 |
| 3229. (இ-ள்.) வெளிப்படை. சிவந்த சடையினை யுடைய இறைவரது திருவானைக்காவில் அணைந்து திருத்தொண்டர்கள் சேர முன்னே வந்து எதிர்கொள்ள வணங்கித் திருக்கோயிலினுள்ளே புகுந்து இறைவரது தாமரைபோன்ற திருவடிகளின் கீழே ஆசைபெருக விழுந்து எழுந்து திருமேனி முழுதும் உரோமபுளகம் போர்ப்பக் கண்களினின்றும் ஆனந்த வெள்ளம் பாயத் திளைப்பாராகி, |
| 75 |
| 3230. (இ-ள்.) மறைகளாய...எடுத்து - "மறைகளாயின நான்கும்" என்று தொடங்கி விரிந்த செஞ்சொற்களாலாகிய தமிழ்ப் பதிகத்தினை நிறையும் பெருவிருப்பத்துடன் தொடங்கி; நிலவும்...ஏத்துவார் - நிலைபெறும் அன்பர்களைப் பார்த்து "இறையும் பணிவார் எம்மையு மாளுடையாரே" என்றென்றேத்துவார்; உறையூர்..உணர்ந்தருளி - உறையூர்ச் சோழரது மணியாரத்தை இறைவர் அணிந்து ஏற்றுக்கொண்டருளிய திருவருட்டிறத்தினை உணர்ந்தருளி, |
| 76 |
| 3231. (இ-ள்.) வளவர் பெருமான்...கேதமுற - சோழ அரசர் மணியாரம் அணிந்து கொண்டபடியே காவிரியின் கொழிக்கும் அலைகளையுடைய நீரிலே மூழ்குதலும் அது நீரினுள் தவறி வீழ்ந்து போக அதனால் அரசன் வருத்தமுற; அளவில்...அணிந்தருளி - அளவில்லாத திருமஞ்சனக் குடத்தினுள் அது புகுதமஞ்சனம் ஆட்டியபோது அதனை இறைவர் அணிந்தருளி; தளரும்...சாற்றினார் - மனந்தளர்ந்திருந்த அவ்வரசனுக்குக் கருள்புரிந்த தன்மையினைச் சிறப்பித்து ஏத்தியருளினார். |
| 77 |
| இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. |