72திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3227. (வி-ரை.) பரங்கருணைக் குணங்கொள் அருள் - பரங்கருணையாவது அளவைகட் கெல்லாம் அப்பாற்பட்டது; பேரருள் - என்றபடி; "நினையா வென்னெஞ்சை நினைவிப்பானை" என்று அரசுகள் விதந்து பாராட்டிய அருளின் தன்மை; பரங்கருணையாய் முகிழ்த்த அருள்;
கொண்ட - திருமேனி முழுதும் இடங்கொண்ட.
புணர்ந்த இசை - பண் நட்டராகமாகிய பதிக இசை; இயல்பிற் றானேவந்து சொல்லோடு பொருந்திய என்பார் புணர்ந்த என்றார்.

73

3228. (வி-ரை.) "அன்னே...நினைக்கேன்" என - இது பதிகத்தின் மகுடமும் கருத்துமாம்; "யாரை நினைக்கேன்" என்றது இறைவர் "நினைக்க மறந்தாயோ?" என்ற சரித வரலாற்றுக்கு அகச்சான்றாகும்.
தன் நேரில்லாப் பதிகமலர் - தன் - தனக்கு; நேர் - ஒப்பு; இப்பதிகத்தின் ஒப்பற்ற தன்மை அதனை இந்நாளிலும் பெரிதும் மக்கள் விரும்பிப் பயின்று வருதலானுமறியப்படும். இப்பதிகத்தினுள் இறைவரை அன்னே, கேள், எம்மான், அண்ணா எனப் பலபடப் பாராட்டிய உரிமைத் திறம் காண்க.
பொன்னிக்கரையின் இருமருங்கும் - இதுவரை காவிரித் தென்கரை வழியே சென்றருளிய நம்பிகள், இறைவரால் நினைவிலூட்டப் பெற்ற இதன் பின், இருமருங்கும் சென்று வழிபட்டனர் என்பதாம்; இவ்வாறு சென்றருளிப் பணிந்த பதிகள், வடகரையில் திருஅன்பிலாலந்துறை, திருத்தவத்துறை, வடகரைத் திருமாந்துறை முதலியனவும், தென்கரையில் திருக்கானூர், திருநியமம், திருவேங்கூர் முதலியனவுமாம் என்பது கருதப்படும். இவற்றுக்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில!
மேம்பால் - காவிரியின் வரவு நோக்கியவாறே மேற்குத் திசையில். போதுவார் - அணைந்து என மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிபுகொள்க.

74

திருமழபாடி
திருச்சிற்றம்பலம்

பண் - நட்டராகம்

பொன்னார் மேனியனே புலித் தோலை யரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே யுன்னையல்லா லினி யாரை நினைக்கேனே.

(1)

ஏரார் முப்புரமு மெரி யச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழ பாடியுண் மேயவனைச்
சீரார் நாவலர்கோ னாரூர னுரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார் பர லோகத் திருப்பாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- ஆசிரியர் 3228 காட்டியருளியபடி.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) பொன்னார் மேனி - பொன் - பொன் நிறம்; பொன்போன்ற திருமேனி; "பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி" (கழறிற்); மின்னார் செஞ்சடை - "பொலிந்திலங்கு மின்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம் வீழ் சடை"; மிளிர் - சடையின் மேலும் விளங்கும்; மாணிக்கம் - தலச்சுவாமி பெயர் - "வயிர மணித்தூண்" என்ற குறிப்புப் பதிக முழுதும் குறித்தல் காண்க;-(2) கீளும் கோவணமும்; கேள் - சுற்றம்;-(3) எம்மான் - தந்தை; எம்மனை - தாய்; சுற்றம் என்ற பொருளில் வந்தன;