| |
| போது நீரினுடனே அதனைத் தமது திருமேனியில் அணிந்தருளினார் என்பது "நின்மல! கொள்ளென வாங்கே, ஆரங்கொண்ட" என்ற பதிகத்தாற் பெறப்படும். |
| சிறக்க - யாவரும் சிறப்பா யறியும்படி; சாற்றினார் - எடுத்துப் போற்றினார். தலவரலாறாதலின் இறைவரது அருளின் பெருமை குறிக்க அதனைச் சிறக்கச் சாற்றினார் என்பது. |
| திருவாரம் - என்பதும் பாடம். |
| 77 |
| திருவானைக்கா |
| திருச்சிற்றம்பலம் | பண் - காந்தாரம் |
| மறைக ளாயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந் துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையு நன்மையு மாய அறையும் பூம்புன லானைக் காவுடை யாதியை நாளும் இறைவ னென்றடி சேர்வா ரெம்மையு மாளுடை யாரே. | |
| (1) |
| தார மாகிய பொன்னித் தண்டுறை யாடி விழுத்தும் நீரி னின்றடி போற்றி நின்மல கொள்ளென வாங்கே ஆரங் கொண்டவெம் மானைக் காவுடை யாதியை நாளும் ஈர முள்ளவர் நாளு மெம்மையு மாளுடை யாரே. | |
| (7) |
| ஆழி யாற்கரு ளானைக் காவுடை யாதிபொன் னடியின் நீழ லேசர ணாக நின்றருள் கூர நினைந்து வாழ வல்லவன் றொண்டன் வண்டமிழ் மாலைவல் லார்போய் ஏழு மாபிறப் பற்று வெம்மையு மாளுடை யாரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம். |
| பதிகக் குறிப்பு :- ஆசிரியர் முன் (3230) காட்டியருளியவாறு கண்டு கொள்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) துறையும் தோத்திரம் - துறைகளிலுமாகிய தோத்திரம்; தோத்திரத்து இறை - தோத்திரங்களுக் கெல்லாம் நுதலிய பொருளாகிய முதல்வன்; வேதங்களும் எவ்வகைக் கீதங்களும் எப்பொருளையேனும் எத்தெய்வத்தையேனும் சொல்லினும் அவற்றிற்கெல்லாம் பொருளாகும் முழு முதல்வன்; இறையும், தொன்மையும், நன்மையும் ஆகிய ஆதி - என்று கூட்டுக; நாளும் சேர்வார் என்க. இறைவன் என்று - இவரே முழுமுதல்வன் என்றுட் கொண்டு; சேர்வார் - சேரும்அடியவர்கள்; "எதிர்கொள்ள வந்து நிலவும்அன்பர்" (3230); எம்மையும் - உம்மை ஆட்கொள்ளத் தகுதிபெறாத எம்மையும் என்று இழிவு சிறப்பும்மை;-(2) வங்கம் - கப்பல்; வங்கமேவிய என்றது வேலைகளின் பொதுவியல்பு; வஞ்சகர்கள் - தேவர்கள், முதல்வனாதலின் முதலில் வந்தவிடத்தினை நீ உண்டபின் நாங்கள் பின்னர் எழுந்த அமுதினைப் பின் உண்போம் என்று வேண்டிய நயப்பாடு வஞ்சம் எனப்பட்டது; அடராமை - வருந்தாதபடி;-(3) நேரிழை - கங்கை; கொன்றை...அரவங்கள் - உம்மைத் தொகை; ஏலுமாறு - பொருந்திய வகையால்;-(4) பந்தம் - தன்னின் நீங்காது பிணிப்பவன்;-(5) தீ கணையாக அரவம் நாணாகக், கல் சிலையாகக் கொண்டு என்க; கல் - மேருமலை; வளையும் சிலை - வளையும் வில்; இதனால் வளையாத கல்லினை என்பது கொள்ளக் கிடக்கும் நயம் காண்க;-(6) விலையிலி - விலை அளவு |