[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்75

படாத; கலன் - ஈண்டு எலும்பு - பாம்பு முதலியவற்றை அணியாக் கொண்டமை குறித்து நின்றது;-(7) தாரம் - ஆதாரம் என்பது தாரம் என நின்றது; தாரகம் - தாங்குவது என்க. விழுத்துநீர் - விழவிட்ட ஆற்றுநீர்; "நின்மல கொள்" என இறைவரே இதனைத் தேவரீரே ஏற்றுக்கொள்ளுக என்று; ஆங்கே - அவ்வாறே; இது தல சரிதங்களுள் ஒன்று; மேல் ஆசிரியர் (3231) இதனை விதந்தெடுத்துக் காட்டியமை இதன் சிறப்பினை யுணர்த்தும்;-(8) உரவம் - வலிமை; இரவும் - பகலும் - இறைவரை எப்போதும் மறவாதேத்துதல் வேண்டும் என்பது;-(9) காலனைக் காலாற் கலங்கச் செய்வானை என்றும், காமனைக் கலங்கக் கண் சிவப்பானை என்றும் உரைக்க; கலங்க என்பதனை ஈரிடத்தும் கூட்டுக; காலனும் காமனும் உயிர் போய்ப் பின் உயிர்ப்பிக்கப் பெற்றபடியால் நிலைகலங்குதல் மட்டும் நிகழ்ந்ததென்பது குறிப்பு; அலங்கல் - அழகு; பொரும் - அலைத்துவரும்;-(10) ஆழியான் - சக்கரமுடைய விட்டுணு:
தலவிசேடம் :- திருவானைக்கா -III- பக் - 513 பார்க்க.
3232
சாற்றி யங்குத் தங்குநாட் டயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயி லெம்மருங்குஞ் சென்று தாழ்ந்து நிறைவிருப்பாற்
போற்றி யங்கு நின்றும்போய்ப் பொருவிலன்பர் மருவியதொண்
டாற்றும் பெருமைத் திருப்பாச்சி லாச்சி ராமஞ் சென்றடைந்தார்.

78

(இ-ள்.) சாற்றி...நாள் - முன் கூறிய தமிழ்மாலை சாற்றி அத்திருப்பதியில் தங்கியிருக்கும் நாட்களிலே; தயங்கும்...போற்றி - விளங்கும் பவளம் போன்ற திருமேனியில் திருநீற்றினையுடையவரது திருக்கோயில்கள் எப்பக்கத்தும் உள்ளனவற்றைச் சென்று பணிந்து நிறையும் விருப்பினாலேதுதித்து; அங்கு நின்றும் போய் - அங்கிருந்து மேல்சென்று; பொருவிலன்பர்...அடைந்தார் - ஒப்பற்ற தொண்டர்கள் பொருந்திய திருத்தொண்டு செய்யும் பெருமையுடைய திருப்பாச்சிலாச்சிராமத்தினைச் சென்று அடைந்தருளினர்.
(வி-ரை.) சாற்றி - முன் பாட்டிற் கூறியவாறு பதிகம் சாற்றி முற்றுவித்து; பவளத் திருமேனி நீற்றர் - பவளம் போன்ற திருமேனிமேல் திருநீற்றினை உடையவ இறைவர். "பவளம்போன் மேனியிற் பால் வெண்ணீறும்" (தேவா.)
கோயில் எம்மருங்கும் சார்ந்து - இவை திருச்சிராப்பள்ளி, உறையூர் (திருமூக்கீச்சரம்), திருக்கற்குடி முதலாயின என்பது கருதப்படும்.
போற்றி - இப்பதிகங்கள் கிடைத்தில!
பொருவில் - ஒப்பற்ற; பொரு - ஒப்பு.
பொருவில்....பெருமை - இப்பதியில் வழி வழியாய்ச் சிவனடிமைத் திறத்து நின்ற கொல்லிமழவன் சரிதக்குறிப்பும், அவர் போன்ற தொண்டர்களின் பணியும் பெற வைத்தார். ஆளுடைய பிள்ளையார் புராணம் (2209 - 2218) பார்க்க. அதன் முன்னும் அந்நாள் முதல் இந்நாள் வரையும் தொண்டர் பணிவிடைகளின் பெருமை இப்பதியில் நிகழ்ந்து வந்ததென்பது தொண்டாற்றும் பெருமை என்பதனாற் பெறவைத்தார். இனி, நம்பிகளால், முன்னிலைப் படுத்தி இங்குப் பதிகம் பாட நின்ற பெருமையுடைய தொண்டர்களின் தன்மைக் குறிப்புமாம்.

78

3233
சென்று திருக்கோ புரமிறைஞ்சித் தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண் டுள்ளணைந்து முதல்வர் முன்னம்லீழ்ந்திறைஞ்சி