76திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

நன்று பெருகும் பொருட்காத னயப்பும் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொரு ளருளா தொழிய நேர்நின்று,

79

3234
அன்பு நீங்கா வச்சமுட னடுத்த திருத்தோ ழமைப்பணியால்
பொன்பெ றாத திருவுள்ளம் புழுங்க வழுங்கிப் புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பா டுடையார்போல்
என்பு கரைந்து பிரானார்மற் றிலையோ?" வென்ன வெடுக்கின்றார்.

80

வேறு

3235
நித்தமு நீங்கா நிலைமையி னீங்கி
   நிலத்திடைப் புலங்கெழும் பிறப்பால்
உய்த்தகா ரணத்தை யுணர்ந்துநொந் தடிமை
   யொருமையா மெழுமையு முணர்த்தி
"யெத்தனை யருளா தொழியினும் பிரானா
   ரிவரலா தில்லையே?" யென்பார்
"வைத்தனன் றனக்கே தலையுமென் னாவு"
   மெனவழுத் தினார்வழித் தொண்டர்.

81

3233. (இ-ள்.) சென்று...வீழ்ந்திறைஞ்சி - சென்று திருக்கோபுரத்தினை வணங்கித் தேவர்கள் பெருகியுள்ள திருந்தப்பாடுடைய அழகிய திருமுற்றத்தினை வலமா வந்து உள்ளே அணைந்து இறைவரது திருமுன்பு நிலமுற விழுந்து வணங்கி; நன்று...பரவி - நன்மை பெருகும் பொருள் பெறும் காதலினால் அவ்விருப்பம் பெருக இறைவரெதிரே நின்று துதித்து; நினைந்த...நேர்நின்று - தாம் எண்ணிய பொருளினை இறைவர் அருளாதொழியத் திருமுன்புக்கு நேரேநின்று,

79

3234. (இ-ள்.) அன்பு நீங்கா...பணியால் - அன்பு மாறாத அச்சத்துடனே பொருந்திய திருத்தோழமைப் பணிவிடையினாலே;பொன் பெறாத...அழுங்கி - தாம் விரும்பியவாறே இறைவர்பாற் பொன் கிடைக்கப் பெறாத திருவுள்ளத்தில் புழுக்கம் நிகழ வருந்தி; புறம் பொருபால்....உடையார்போல் - புறம்பு நின்ற திருத்தொண்டர்களை முகநோக்கி முறைப்பாடு உரைப்பவர் போல; என்பு...எடுக்கின்றார் - எலும்பும் கரைந்துருகப் "பிரானார் மற்றிலையோ?" என்ற கருத்துட் கொண்ட மகுடம் அமையப் பதிகத்தினைத் தொடங்குகின்றாராய்,

80

3235. (இ-ள்.) நித்தமும்...நொந்து - ஒருநாளும் நீங்குதலில்லாத நிலைமையின் (திருக்கயிலையினின்றும்) நீங்கி இந்நிலத்தினிடத்தின் அறிவுடன் பொருந்தும் பிறவியினிடத்துச் செலுத்திய காரணத்தை மனத்தில் உணர்ந்து வருந்தி; அடிமை...உணர்த்தி - அடிமைத் திறத்தின் ஒருமைப்பாடானது எழுபிறப்பிலும் தொடரும் நிலையினை எடுத்துக்கூறி; "எத்தனை...என்பார் - எவ்வளவும் திருவருள் புரியாதொழிந்தாலும் பிரானார் இவரல்லாது இல்லையே?" என்பாராய்; வைத்தனன்....வழித் தொண்டர் - "வைத்தனன் றனக்கே தலையுமென் நாவும்" என்று தொடங்கித் துதித்தருளினர் வழித்தொண்டராகிய நம்பிகள்.

81

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3233. (வி-ரை.) தேவர் மலிந்த திருந்து மணிமுன்றில் மலிதலாவது உட்புக்குச் சேவை செய்வதற்குக் காலம் பார்த்தும், உத்தரவை எதிர்நோக்கியும் கூடிக் காத்துக் கிடத்தல்.