| |
| அதன் வழித்தாய்வந்த துணைக்காரணம்; காரணத்தை உணர்ந்து நோதலாவது தென்றிசை வாழ்ந்திடவுள்ள யாத்திரைகளும் அடியார் பணிகளும் நிகழவும், குறித்த இருமணங்களுள் எஞ்சி நின்ற திருமணம் நிகழ்ந்திடவும் உள்ள மேற்சரித வரலாறுகள் நடைபெறுதற் கின்றியமையாத பொருள் அருளப்பெறாது வருந்துதல். |
| அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி - அடிமை ஒருமை - அடிமைத்திறத்தில் இரண்டுற மனம் வையாது சிவனோடு ஒன்றித்து நின்ற ஒருமைப்பாடு; எழுமையும் - ஏழுவகைப் பிறவியின் கண்ணேயும்; உணர்த்தி - அடியார் மாட்டு உரைப்பார் போன்று இறைவரிடம் விண்ணப்பித்து; ஒருமையாம் ஏழுமையு மடிமைத்திறம் இப்பதிகத்துட் பாட்டுத்தோறும் கண்டுகொள்ளத் தக்கது. 5-8-10-11 - பாட்டுக்கள் பார்க்க; "உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமையுரைத் தக்கா லுவமனே யொக்கும்" என்ற முதற்பாட்டின் கருத்தினை எடுத்துக் காட்டும் வகையால் விரித்தபடி; பதிகம் 10-வது திருப்பாட்டுச் சிறப்பாய் எடுத்துக் காட்டப்பட்டது. |
| எத்தனை...என்பார் - இது பதிகக் கருத்தாகிய குறிப்பு. எத்தனை - எத்தனையும்; முற்றும்மை தொக்கது; "ஏழு பிறவியிலும் உணர்த்திச் சிறிதும் அருளா தொழியினும்" என்றுரைப்பாரு முண்டு. |
| வைத்தனன்...என - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. |
| வழித் தொண்டர் - திருக்கயிலைத் தொண்டின் றொடர்ச்சியும், நம்பிகள் அவதரித்த மரபு "மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும்" மரபாதலும் குறிப்பு. வன்றொண்டர் - என்பதும் பாடம். |
| 81 |
| திருப்பாச்சிலாச்சிராமம் |
| திருச்சிற்றம்பலம் | பண் - தக்கராகம் |
| வைத்தனன் றனக்கே தலையுமென் னாவு நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி உய்த்தனன் றனக்கே திருவடிக் கடிமை யுரைத்தக்கா லுவமனே யொக்கும் வைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பாமர் பித்தரே யொத்தோர் நச்சில ராகி லிவரலா தில்லையோ பிரானார். | |
| (1) |
| ஏசின வல்ல விகழ்ந்தன வல்ல வெம்பெரு மானென்றெப் போதும் பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் தடிகளை யடிதொழப் பன்னாள் வாயினாற் கூறி மனத்தினா னினைவான் வளவய னாவலா ரூரன் பேசின பேச்சைப் பொறுக்கிலா ராகி லிவரலா தில்லையோ பிரானார். | |
| (12) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- ஆசிரியர் முன் (3235) காட்டியருளியவாறு கண்டு கொள்க;- குறிப்பு : (1) இப்பதிகம் இறைவர் திருமுன்பு நின்றவாறே புறம்பு நின்ற அன்பர்களை முகநோக்கி முறைப்பாடு உரைப்பார்போல் அருளிச்செய்யப்பட்டது; (3234); இவரலாது - என்ற அணிமைச் சுட்டினால் நம்பிகள் அணிமையில் நின்று சுட்டிக் கூறிய திறம் வெளிப்பட உணரப்படும்; (2) இப்பதிகம் 12 திருப்பாட்டுக்களைக்கொண்ட சிறப்புடையது. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வைத்தனன் றனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் - "வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சுந் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனை" (தேவா); தனக்கே - ஏகாரம் பிரிநிலை; "நித்தமுநீங்காநிலைமை" (3235) என்ற கருத்து; வைத்தனன் - வைத்தலாவது படைத்தளித்தல்; "பிறவிதானும் |