| |
3237 | அப்பதி நீங்கி யருளினாற் போகி யாவினஞ் சாடுவார் நீடும் எப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி யிறைவர்பைஞ் ஞீலியை யெய்திப் பைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப் பாங்கமர் புடைவலங் கொண்டு துப்புறழ் வேணி யார்கழ றொழுவார் தோன்றுகங் காளரைக் கண்டார். | |
| 83 |
| (இ-ள்.) அப்பதி...போகி - அந்தப் பதியினை நீங்கி அருள்விடை நீங்கி பெற்றுச் சென்று; ஆவினஞ்சு....இறைஞ்சி - ஆனைந்து என்னும் பஞ்சகவ்வியத் திருமஞ்சன மாடியருளும் இறைவர் நீடியுள்ள எல்லாப் பதிகளையும் காவிரியின் இரண்டு கரைப் பக்கங்களிலும் சென்று வணங்கி; இறைவர்...எய்தி - இறைவரது திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்ந்து; பைப்பணி....தொழுவார் - நச்சுப்பையினையுடைய பாம்பினை அணிந்த சிவபெருமானது கோயிற் றிருக்கோபுரத்தினை வணங்கிப் பக்கத்துச் சுற்றி வலங்கொண்டு வந்து பவளம் போன்ற சடையினையுடைய இறைவரது திருவடிகளைத் தொழுவார்; தோன்று....கண்டார் - முன்னே காட்சிப்பட நின்ற கங்காள வேடங்கொண்ட இறைவரைக் கண்டார். |
| (வி-ரை.) அருளினால் - அருள்விடை பெற்று. |
| எப்பெயர்ப் பதியும் இருமருங்கு - இவை, திருச்செந்துறை, திருவாலந்துறை, திருத்துடையூர், திருப்பராய்த்துறை முதலாயின என்பது கருதப்படும். நம்பிகளது பதிகங்கள் கிடைத்தில! எப்பெயர்ப்பதியும் எல்லாப் பதிகளிலும். |
| பைப்பணி - பை - நச்சுப் பை; பணி - பாம்பு. துப்பு - பவளம். |
| தொழுவார்...கண்டார் - தொழுவாராகிய நம்பிகள், தம் முன்பு இறைவரைக்கங்காள வேடமுடையவராகக் கண்டனர். கங்காள வேடத்தாராக இவருக்கு இறைவர் எதிர் காட்சியளித்தனர். "ஆரணீய விடங்கரே" என்ற பதிகமும், அதன் கருத்தினை ஆசிரியர் மேற்பாட்டில் விரிப்பதுவும் காண்க. |
| இத் திருவேடங் கண்ட காரணமே பதிகம் அவ்வா றருளப்பட்டதென்பது. |
| 83 |
3238 | கண்டவர் கண்கள் காதனீர் வெள்ளம் பொழிதரக் கைகுவித் திறைஞ்சி வண்டமர் குழலார் மனங்கவர் பலிக்கு வருந்திரு வடிவுகண் டவர்கள் கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக் குலவுசொற் "காருலா விய"வென் றண்டர்நா யகரைப் பரவி"யா ரணிய விடங்கரா" மருந்தமிழ் புனைந்தார். | |
| 84 |
| (இ-ள்.) கண்டவர்....இறைஞ்சி - முன் கூறியவாறு கங்காள வேடராக இறைவரைக் கண்ட நம்பிகள் காதலினாலே தமது திருக்கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர்வெள்ளம் பொழியக் கைகள் கூப்பி வணங்கி; வண்டமர்....கூற்றாக - வண்டுகள் விரும்பி வாழும் கூந்தலையுடைய பெண்களது உள்ளத்தைக் கவர்கின்றபடி பலிக்கு வரும் இறைவரது திருவடிவினைக் கண்டு அவர்கள் கொண்ட மயலி |