82திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

னாலே வினாவுகின்ற பொருளுடைய சொற்களாக வைத்து; குலவு....புனைந்தார் - விளங்கும் சொல் "காருலாவிய" என்று தொடங்கித் தேவதேவரைத் துதித்து "ஆரணீய விடங்கரே" என்ற மகுடங் கொண்ட அருந் தமிழ்மாலை புனைந்தருளினர்.
(வி-ரை.) காதல் நீர் கண்கள் பொழிதர - என்க; காதல் நீர் - ஆனந்தக் கண்ணீர்.
வண்டமர்...வடிவு - பிட்சாடணத் திருவுருவம்; தாருகாவனத்து இருடியரது மனைவிமார்களிடம் இத் திருவுருவுடன் இறைவர் சென்று அவர்களை மயங்கச் செய்து அவர்களது மனங்களைக் கவர்ந்த வரலாறு கந்தபுராணத்துட் காண்க.
மயலால் அவர்கள் வினவு கூற்றாக - அத் திருவடிவத்தினைக் கண்டு அதில் ஈடுபட்டு மயங்கி அவர்கள் அவரை விளித்துப் பேசும் காதற் சொற்களாகிய பொருள் கொண்டு.
இது பதிகக் கருத்தும் குறிப்புமாக ஆசிரியர் காட்டியவாறு; "மங்கை மார்பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல்" (11) என்ற பதிகத்தினை ஆசிரியர் பொருள் விரித்தவாறு.
"காருலாவிய" என்று - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
"ஆரணீய விடங்க"ராம் அருந்தமிழ் - ஆரணீய விடங்கரே என்று பாட்டுத்தோறும் முடிபுகொண்டு இறைவரை விளித்து வினவிய தமிழ்ப் பதிகம்; ஆம் - முடிபுகொண்ட; ஆரணீயம் - வனத்தின் வரும்; வனத்தைப் பற்றிய; ஆரண்யம் - காடு; விடங்கர் - உளி படாத திருமேனியுடையவர்; ஒருவரால் ஆக்கப்படாது தாமாகச் சமைந்த இயற்கைத் திருவடிவம்; மேலே வேறு அணிந்து மறைக்கப்படாத நக்க வடிவம் என்பதும் குறிப்பு.
வண்டறை - என்பதும் பாடம்.
திருப்பைஞ்ஞீலி
திருச்சிற்றம்பலம்

பண் - கொல்லி

84

காரு லாவிய நஞ்சை யுண்டிருள் கண்ட வெண்டலை யோடுகொண்
டூரெலாந்திரிந் தென்செய் வீர்பலி யோரி டத்திலே கொள்ளுநீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலு மார ணீய விடங்கரே.

(1)

அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியி லார ணீய விடங்கரை
மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர் வேண்டிக் காதன் மொழிந்தசொன்
மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன் றொண்டன் வாய்மொழி பாடல்பத்
துன்னி யின்னிசை பாடு வாருமை கேள்வன் சேவடி சேர்வரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு: - முன் ஆசிரியர் (3237 - 3238) எடுத்துக் காட்டியவாறு கண்டுகொள்க.
பதிகப் பாட்டுக் குறிப்பு: - (1) கார் - கருமை நிறம்; மேகம் என்றுகொண்டு மேகத்தின் தன்மை - கைம்மாறு கருதாத உதவி - கொண்ட என்றதும் குறிப்பு; உலாவுதல் - பெறுதல்; நீர் ஓரிடத்திலே பலிகொள்ளும் - என்க; ஊர் எல்லாம் திரியாது எம் ஒருவரிடத்திலே தங்கும் என்ற காதற் குறிப்புடைய சொல்; பாரெலாம்....பணியும் - உலகமெல்லாம் வந்து இங்கு உம்மை வணங்கும்; நீர் வேறெங்கும் போதல் வேண்டா என்பது; ஆரமாவது நாகமோ சொலும் - ஆரம் பாம்பானால் அணுக வந்து பலி எப்படி இடுவர்? என்பது குறிப்பு. "நீயுலக