84திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

குராமலர்கள் அரும்புதற் கிடமாகிய சோலைகள் அணி செய்யும் திருப்பாண்டிக் கொடுமுடியினை அணைந்தருளினர்.
(வி-ரை.) திருக்கடைக்காப்புச் சாத்தி - பதிகக் கருத்தை விளக்குதலால் திருக்கடைக்காப்பினை விதந்தெடுத் தோதினார்.
கரவில் அன்பர் - நெஞ்சிற் கள்ளங் கபடு இல்லாத அன்பர்கள்; "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால், விரவாடும் பெருமானை" (தேவா); கரவு - மனத்திற் கொள்ளும் கபடம்; கள்ளம். இவ்வன்பர்கள் திருப்பாச்சிலாச்சிராமத்தில் நம்பிகளால் முகநோக்கிப் பாடப்பெற்றாராய் உடன் வந்தவர்கள் போலும்.
அன்பர்தங் கூட்டமும் தொழுது கலந் தினிதிருந்து - அன்பர்களைத் தொழுதலும் அவருடனிருத்தலும் சீவன்முத்தராகிய அணைந்தோர் தன்மையதாம்.
விரவிய - இடையிற் பொருந்திய; கொங்கிற் புகுமுன் வழியிடை விரவிய.
குரவலர் சோலை அணி...கொடுமுடி - குரவு - "குராமலர்" (தேவா); "குறியதன் கீழாக் குறுகலும் அதனோ, டுகர மேற்றலும்" என்பதிலக்கணம். குரா என்றது குரவு என நின்றது.
ஈங்கோய்மலை - நம்பிகள் பதிகம் கிடைத்திலது!
விமலர்தம் பதிபல - இவை காவிரிக் கரையில் திருப்பைஞ்ஞீலியினை அடுத்துக் கரை அளவில் உள்ளவை. இவ்வாறுள்ள பழைய கோயில்கள் பல இன்றும் காவிரிக்கரையில் காணப்படுவன.

85

3240
கொங்கினிற் பொன்னித் தென்கரை கறையூர்க்
   கொடுமுடிக் கோயின்முன் குறுகிச்
சங்கவெண் குழைய ருழைவலஞ் செய்து
   சாரந்தடி யன்பினிற் றாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது,
   புனிதர்பொன் மேனியை நோக்கி
"இங்கிவர் தம்மை மறக்கவொண் ணா"தென்
   றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப,

86

3241
"அண்ணலா ரடிகண் மறக்கினு நாம
   வஞ்செழுத் தறியவெப் பொழுதும்
எண்ணிய நாவே யின்சுவை பெருக
   விடையறா தியம்பு"மென் றிதனைத்
திண்ணிய வுணர்விற் கொள்பவர் "மற்றுப்
   பற்றிலே" னெனச்செழுந் தமிழால்
நண்ணிய வன்பிற் பிணிப்புற நவின்றார்
   நமச்சிவா யத்திருப் பதிகம்.

87

3240. (இ-ள்.) கொங்கினில்....குறுகி - கொங்குநாட்டிலே காவிரியின் தென்கரையில் உள்ள கறையூர்ப் பாண்டிக்கொடுமுடித் திருக்கோயிலின் முன்னே சேர்ந்து; சங்கவெண்...தொழுது - சங்கினா லியன்ற குழையினை அணிந்த இறைவரைத் திருக்கோயிலினைச் சூழ்ந்து வலஞ்செய்து சார்ந்து திருவடிகளில் அன்பினாலே வணங்கி மேன்மேலும் பொங்கிய ஆசை மேலும் பெருகத் தொழுது; புனிதர் பொன்மேனியை நோக்கி - இறைவரது பொன்னார்ந்த திருமேனியை நோக்கி; இங்