| |
| பதிகக் குறிப்பு: - ஆசிரியர் முன் (3241) காட்டியவாறு கண்டுகொள்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு: - (1) எனக்குப் பற்று மற்றின்றி என்க; பெற்றலும் - பெறுதலும்; அவ்வாறு பாவிக்கப் பெற்றதனால் பிறந்தேன்; இந்நிலை பெற்றலும், பிறவாத தன்மை எய்தினேன் என்க. பிறந்தேன் - வினைப் பெயர்; பிறந்தே னாகிய - பிறவியில் வந்த - நான். உனை நான்...நமச்சிவாயவே - முன் ஆசிரியர் இதன் உரை விரித்தருளினர் (3241); நமச்சிவாயவே - ஏகாரம் பிரிநிலை;-(2) ஏத்துவார் - ஏத்தக் கடமைப்பட்டவர்கள் அது செய்யாமல் இகழ்ந்தும் மறந்தும் உள்ள நாட்கள் கெட்ட நாள்கள் என்பது. ஆதலின் அவர்களைப் பொருளாகக் கருதமாட்டேன் என்க. வட்ட வாசிகை - வட்டவடிவா யமைந்த திருவாசிபோல அமைத்த மாலை; இட்டன் - அன்புடையவன்; நட்டவா - கொடுமுடியினை விரும்பியவரே; கொடுமுடியில் நிலைபெற்றவரே;-(3) ஓவுநாள் - நாட்கணக்கினின்று நீங்கின - நீக்கப்பட்ட - நாட்கள்; "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" (அரசு. தேவா) என்ற கருத்து; உன்வழிபாடு இல்லாமல் கழியும் நாட்களை உள் உணர்வு அழியும் நாட்களாகவும், உயிர்போகு நாட்களாகவும், உயிர் போயினபின் உடல் பாடையின்மேற் காவும் நாட்களாகவும் கருதுவேனன்றி வாழும் நாளாகக் கருதமாட்டேன் என்க. கருதேன் - இவற்றை நாட்களாகக் கருதேன்; ஆதலின் எனது நா - சொல்லும் என்பதாம்; பாவு - பரவும்; நாவலா - நாவன்மையானது வேதாகமங்களைச் சொல்லுதல்;-(4) கல்லை உந்தி - மலைப் பண்டங்களை - பெருங்கற்களை அலைத்துச்கொண்டு; வளம் பொழிந்து இழி - மலைப்பண்டங்களை அலைத்து வருதலால் அக்குறிஞ்சி வளங்களை இங்குக்கொண்டுவந்து பொழிந்து இறங்கும்; இழிதல் - கீழிறங்குதல்;-(5) அஞ்சினார்க் கரணாதி - அஞ்சி வந்தடைந்தார்களுக்கு அபயம் கொடுக்கும் காவலனாவாய்; ஆதி - ஆவாய்; நல்கினாய்க்கு அழிகின்றது என் - நல்கின உனக்குக் குறையாவதென்னையோ?;-(6) ஏடு -ஏடு போன்ற; உயர்ந்த - எளிய - என்றலுமாம் (எடு - பகுதி - ஏடு - எடுத்தலுடையது); பாடு - பெருமை; சேடன் - அறிவிற்சிறந்தவன்;-(7) விண்டன - நீங்கின; கோடு - கரை;-(8) கோலினாய் - வளைத்தாய்;-(9) சாரணன் - பற்றுக்கோடா யுள்ளவன்;-(10) வண்டு - பாண் - அறை என்க; பாண் - இசை; அறை - பாடுதற் கிடமாகிய; பாம்பு அரை நாணன் - பாம்பினை அரை நாணாகவுடையவன். |
| தலவிசேடம் :- திருப்பாண்டிக்கொடுமுடி - 2236-ம் பாட்டின்கீழ் உரைக்கப்பட்டது. |
3242 | உலகெலா முய்ய வுறுதியாம் பதிக முரைத்துமெய் யுணர்வறா வொருமை நிலவிய சிந்தை யுடன்றிரு வருளா னீங்குவார் பாங்குநற் பதிகள் பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப் போந்துதண் பனிமலர்ப் படப்பைப் குலவுமீ கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகுமா தரவால். | |
| 88 |
| (இ-ள்.) உலகெலாம்...உரைத்து - உலகெல்லாம் உய்யும்படி உறுதி தருவதாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச்செய்து; மெய்யுணர்வறா...நீங்குவார் - மெய்யுணர்வு இடையறாத ஒன்றிய தன்மை நிலைபெற்ற சிந்தையினுடனே திருவருள் |