|
| |
| புணர்ந்து மெய்யுணர்வினிற் பொங்க - புலனின்பம் புணரு முணர்வு வேறு; இங்கு அவற்றாற் புலப்படா இன்பம் புணர்வுறும் மெய்யுணர்வு - சிவானந்த போக பூமி - வேறு; இது சிவஞானஅருட்புவனமாகிய அருளுணர்விற் பொங்கிற்று என்பது. |
| தாண்டவம்...கிடைத்தபின் - அருட் கூத்து ஆடும் தமது பெருமானை வெளிப்படக் கை வரும்படி நேர் பெற்றபின்; தலைப்படுதல் - கிட்டுதல்; கிடைக்கப் பெறுதல். |
| சைவ ஆண்டகையார்....நம்பிகள்; ஆண்டகைமை - அன்பின் உறைப்பாகிய வீரம். |
| அடுத்த அந்நிலைமை விளைவு - பெற்ற சிவானந்தத்தின் விளைவாகிய போகம். |
| யார் - உரைப்பார் - யார் என்ற வினா ஒருவருமிலர் என்று எதிர்மறை குறித்து நின்றது; ஆதலின் எம்மாற் சொல்லலாகாதது என்பது குறிப்பெச்சம். |
| குறிப்பு: - இப்பாட்டினையும் "ஐந்து பேரறிவும்" என்ற திருப்பாட்டினையும் ஒப்பிட்டுக் காண்க. |
| 90 |
3245 | அந்நிலை நிகழ்ந்த வாரருள் பெற்ற வன்பனா ரின்ப வெள்ளத்து மன்னிய பாடன் மகிழ்ந்துடன் பரவி வளம்பதி யதனிடை மருவிப் "பொன்மணி மன்று ளெடுத்தசே வடியார் புரிநடங் கும்பிடப் பெற்றால் என்னினிப் புறம்போ யெய்துவ"தென்று மீண்டெழுந் தருளுதற் கெழுவார், | |
| 91 |
3246 | ஆயிடை நீங்கி யருளினாற் போவா ரருவரைச் சுரங்களும் பிறவும் பாயுநீர் நதியும் பலபல கடந்து பரமர்தம் பதிபல பணிந்து மேயவண் டமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார் தென்றிசைக் கற்குடி மலையில். | |
| 92 |
| 3245. (இ-ள்.) அந்நிலை....அன்பனார் - அத்தன்மை நிகழப் பெற்ற நிறைந்த அருளினைப் பெற்ற அன்பனாராகிய நம்பிகள்; இன்பவெள்ளத்து...பரவி - இன்பப் பெருக்கிலே நிலைத்த திருப் பாட்டினை மகிழ்ச்சியோடும் பாடித் துதித்து; வளம்பதி...மருவி - வளம் பொருந்திய அப்பதியினிடைத் தங்கியிருந்தருளி; பொன்மணி...என்று - அழகிய பொன்னம்பலத்தினில் எடுத்த சேவடியினையுடைய கூத்தப்பெருமானார் புரிநடனத்தினைக் கும்பிடும் பேறு பெற்றால் இனிப் புறமே சென்று கிடைக்கப்பெறும் பொருள் வேறென்ன உள்ளது? (ஒன்றுமில்லை) என்ற கருத்துடனே; மீண்டு - அங்கு நின்றும் புறப்பட்டு; எழுந்தருளுதற் கெழுவார் - செல்வதற்குத் துணிந்தெழுவாராகி; |
| 91 |