|
  |  |  | 
  |  | 3246. (இ-ள்.) ஆயிடை....போல்வார் - அவ்விடத்தினின்றும் நீங்கி அருள் விடைபெற்றுச்   செல்லும் நம்பிகள்; அருவரை....பரவி - கடத்தற்கு அரிய மலைக் கானங்களும் மற்றும் நிலங்களும்   பெருகிப் பாய்கின்ற நதிகளுமாகிய பலவற்றையும் கடந்து சென்று இறைவரது பதிகள் பலவற்றையும்   வணங்கிப் பொருந்திய வளப்பமுடைய தமிழ்த் திருப்பதிகங்களாலே துதித்து; வெஞ்சமாக் கூடலும்   பணிந்து - திருவெஞ்சமாக் கூடலினையும் தொழுது; சேயிடை....மலையில் - நெடுந்தூரம் கடந்து சென்று   தென்றிசையில் உள்ள திருக்கற்குடி மலையில் வந்து அடைந்தருளினர். | 
  |  | 92 | 
  |  | இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. | 
  |  | 3245. (வி-ரை.) அந்நிலை நிகழ்ந்த - "அடுத்த அந்நிலைமை" (3244) என்று முன்பாட்டிற்   கூறி முடித்த அந்த என அகரம் முன்னறி சுட்டு; நிலையாவது முன்கூறிய சிவானந்த அனுபவநிலை. நிகழ்ந்த   - நிகழப்பெற்ற. | 
  |  | மன்னிய பாடல் - இப்பதிகம் கிடைத்திலது! | 
  |  | மருவி - சிலகாலம் தங்கியிருந்து. | 
  |  | "பொன்மணி....எய்வது" என்று - இக்கருத்துடன் கூடிய பதிகம்பாடி அருள் விடை பெற்று என்பது.   நடம் கும்பிடப் பெறுதலே எல்லாவற்றிலும் சிறந்த பேறு; வீடுதரும் தன்மையுடையது; ஆதலின் இதனை   விட்டுப் புறம்போய்ப் பெறுவது தான் யாது? ஒன்றுமில்லை என்பதாம்; "கும்பிடப் பெற்று மண்ணிலே   வந்த பிறவியே எனக்கு வாலிதா மின்பமாம்" என்ற கருத்து; என்று - என்ற பொருள் கொண்ட   பதிகம் பாடியருளி; இப்பதிகமும் கிடைத்திலது! | 
  |  | மீண்டு - முன் 3244-ல் உரைத்தபடி இறைவர் வயமேயாகித் தன்னை மறந்த அழுந்திய நிலையினின்றும்   வெளிப்பட்ட நிலையின் மீண்டு என்க. | 
  |  | எழுந்தருளுதற்கெழுவார் - அங்கு நின்றும் புறப்பட்டுச் செல்வதற்கு எழுவாராகி; எழுவார்   - நீங்கி - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. இவ்வாறன்றி, உலகியல் வழக்கில்   போகின்றேன் என்னாது, வருகின்றேன் - போய்வருகின்றேன் என்று விடைபெறும் மரபுக்கு ஏற்ப இங்கு   உரைத்துக்கொள்வதுமாம். | 
  |  | 91 | 
  |  | 3246. (வி-ரை.) ஆயிடை நீங்கி - ஆயிடை - அவ்விடத்தினின்றும்; இடை -   இடம்; இடையினின்றும். நீக்கப் பொருளில் வரும் ஐந்தனுருபு தொக்கது. | 
  |  | அருளினால் - அருள்விடை பெற்று. | 
  |  | அருவரை....கடந்து - கற்சுரங்களுங் கட்டாறுகளுமாயுள்ளன மேல் கொங்கு நாட்டின் நிலையும்   அதனை ஒட்டிய கீழ் கொங்கின் நிலையுமாம். "கானகமுந், துன்று மணிநீர்க் கான்யாறுந் துறுகற்   சுரமுங் கடந்தருளி" (வெள்-சருக்-15), "கற்சுரமு நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலகழிய" (கழறிற்.   புரா. 164) முதலியவை பார்க்க. | 
  |  | பதிபல - இவை மூலனூர், தென்னிலை, கருவூர் முதலாயின என்பதும், | 
  |  | நதிகள் - அமராவதி - நன்காஞ்சி - சிற்றாறு - குழகனாறு முதலியன என்பதும் கருதப்படும். | 
  |  | வெஞ்சமாக் கூடல் - கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று. தலவிசேடம்   பார்க்க. | 
  |  | சேயிடை கழிய - இடையிலே பட்ட நெடுந்தூரம் நாடு கடந்து. | 
  |  | கென்றிசை - கொங்கு நாட்டின் தெற்குத் திசையில் உள்ள. | 
  |  | 92 |