“உலகி னியல்பு மரசியல்பு முறுதி யல்ல” வெனவுணர்வார் புலரி யெழுந்து புனன்மூழ்கிப் புனித வெண்ணீற் றினுமூழ்கி் நிலவு திருநந் தனவனத்து நீடும் பணிகள் பலசெய்து் மலரு முகையுங் கொணர்ந்துதிரு மாலை சாத்த மகிழ்ந்தமைத்து, | 8 | (இ-ள்)உலகின்....உணர்வார் - உலகவாழ்வும், அரசவாழ்வும் நிலையில்லாதன என்று உணர்வாராகி; புலரி...மூழ்கி - விடியற்காலையில் எழுந்து தண்ணீரில் முழுகிக் குளித்துத் தூய்மை தரும் திருவெண்ணீற்றினும் குளித்து; நிலவு....செய்து - நிலைபெற்ற திருநந்தன வனத்திலே நீடுகின்ற திருப்பணிகள் பலவற்றையும் செய்து; மலரும்...அமைத்து - பூக்களையும் முகைகளையும் கொணர்ந்து திருமாலைகளைச் சாத்துவதற்கு மகிழ்ச்சியுடனே அமைத்து, (வி-ரை) உலகின்....அல்ல - இயல்பு - இயலுதல்; வாழ்தல்; வாழ்க்கை செலுத்துதல் என்ற பொருளில் வந்தது. உறுதி - நிலைபேறான குறிக்கோள்; உறுதிப் பொருள்; உறுதியல்ல - நிலைபேறுடையன வல்ல; அழியுந்தன்மையுடையன; இவை உறுதியல்ல என்று உணர்ந்தமையால் உறுதியான இறைவன் திருத்தொண்டினையே புரிந்தனர் என்பது. புலரி - விடியற்காலம்; இருள் புலரும் காலம். புலர்தல் - நீங்குதல்; மெலிதல். புனித வெண்ணீற்றினும் மூழ்கி - திருநீற்றினை உத்தூளனமாக மேனி நிறைய அணிதல் இங்கு மூழ்குதல் எனப்பட்டது; உம்மை உயர்வு சிறப்பு; குளித்தல் எண்வகைப்படும் - அவை வருமாறு; வாருணம் (நீரின் மூழ்குதல்); ஆக்கினேயம் (தீச்சம்பந்தமான திருநீறணிதல்); சந்தியா வந்தனத்தில் பஸ்ம ஸ்நானம் என்பதோர் அங்கமாதலும் காண்க. மந்திரம் (மந்திரங்களை உச்சரித்தல்); மானதம் (பிரணவத்தியானம்); திவ்வியம் மகேந்திரம் (சூரிய கிரணத்துடன் தோற்றிய மழையில் கிழக்கு நோக்கி ஏழடி நடத்தல்); மாருதம் (வாயவ்யம்) (காற்றுக் கலந்த பசுப்பாததூளிபட எதிரிட்டு நடத்தல்); பார்த்திபம் (சிவன்கோயில், அல்லது ஆறு இவற்றின் மண்ணைக் குழைத்துத் தரித்தலும் குழைத்த நீரைத்தெளித்துக் கொள்ளுதலும்); கௌரவம் (ஆசாரியர் பாததீர்த்தத்தில் மூழ்குதல் - அதனை மேலே தெளித்தல்; உட்கொள்ளுதல்). இவற்றுள் முன் நான்கும் நித்தியம் எனவும், பின்னைய நான்கும் நைமித்திகம் (நிமித்தம் பற்றிச் செய்யப்படுவது) எனவும் படும். (சைவபூஷணம்). இவற்றுள், இங்குக் கூறியது ஆக்கினேயஸ்நானம் (தீயிற்குளித்தல்). மண்முதலிய ஐம்பூதங்களின் பொருத்தத்தாலும் தூய்மை செய்யப்படும்; அவை ஒன்றற் கொன்றேற்றமாய் வருதலும் உலகியலிலும் வைத்துக் கண்டு கொள்க. புனித வெண்ணீறு - புனிதம் செய்யும் நீறு; “சுத்தமதாவதுநீறு” (தேவா). வெண்ணிறமுள்ள நீறே அணியத்தகுந்தது. நீடும் பணிகள் - மரம் செடி கொடிகளுக்கு நீர்பாய்த்துதல், களை பிடுங்குதல் முதலாயின. மலரும் முகையும் - மலர்கள் அன்றலர்ந்த புதிய பூக்கள்; முகைகள் - சாத்தும் அவ்வக்காலங்களுக் கேற்ப மலரும் பருவமுள்ள அரும்புகள். “கமழ்முகை யலரும் வேலைத், தெய்வநா யகர்க்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமம்Ó (559); “நகைக்கும் பதத்தி னுடன்பறித்தÓ (1023). சாத்த - மாலை - அமைத்து - என்று கூட்டுக. அமைத்தல் - தாமம், பிணையல், கண்ணி என்றிவ்வாறு பல வகையும் அமைத்தல் (1025). |
|
|