இரவு கனவி லெழுந்தருளி “யென்பா லன்பா லெப்பொழுதும் பரவு சேரன் றனக்குனக்குப் பைம்பொன் காணம் பட்டாடை விரவு கதிர்செய் நவமணிப்பூண் வேண்டிற் றெல்லாங் குறைவின்றித் தரநம் மோலை தருகின்றோந் தாழா தேகி வருÓகென்று, | 27 | (இ-ள்) இரவு கனவில் எழுந்தருளி - இரவில் அவருடைய கனவில் வெளிப்பட்டருளி; என்பால்....தனக்கு - நம்மிடம் எப்பொழுதும் பரவும் தன்மையுடைய சேரமானுக்கு; உனக்கு...தர - பசியபொன்னும் காசும் பட்டாடையும் பொருந்திய ஒளி செய்யும் கதிர்மணிகளையுடைய அணிகளும் இன்னும் வேண்டியவற்றையெல்லாம் குறைவில்லாமல் உனக்குத் தரும்படி; நம்...என்று - நமது திருமுகம் தருகின்றோம்; தாமதமின்றிச் சென்று வருக என்று அருளிச்செய்து, (வி-ரை) கனவில் - பத்திரனாரது கனவில். என்பால்...வருக - இஃது இறைவர் பத்திரனாருக்குக் கனவில் அறிய அருளிச் செய்தது. என்பால்...சேரன் - “தன்போ லென்பாலன்பன்Ó என்பது திருமுகப் பாசுரம். சிவன்பாலன்புடையார் செல்வம் தூய்மையுடையது. அது பெறத் தகுதியுடையது என்பது குறிப்பு. “அறத்தாற்றி னீட்டப்பட்ட அனையவை புனிதம்Ó (திருவிளை). காணம் - பொன் - காசு; “கையி லொன்றுங் காண மில்லைÓ (தேவா). தாழா தேகி வருக - விரைந்து சென்று வருக என்றது இலம்பாடு நீக்கும் விரைவு. என்று - என்று கூறி யறிவித்தருளி. |
|
|