அதிர்கழ லுதியர் வேந்தற் கருள்செய்த பெருமை யாலே “எதிரில்செல் வத்துக் கேற்ற விருநிதி கொடுக்கÓ வென்று “மதிமலி புரிசைÓ யென்னும் வாசகம் வரைந்த வாய்மைக் கதிரொளி விரிந்த தோட்டுத் திருமுகங் கொடுத்தார் காண. | 28 | (இ-ள்) அதிர்...பெருமையாலே - சத்திக்கின்ற கழலையணிந்த சேரர்பெருமானுக்கு அருள் செய்த பெருமையினாலே; எதிரில்...என்று - ஒப்பற்ற செல்வத்துக்கேற்றவாறு பெருநிதியினைக் கொடுக்க என்று; மதிமலி...காண - காணும்படி மதிமலிபுரிசை என்று தொடங்கும் வாய்மை வாசகத்தினை எழுதிய கதிர் ஒளி விரிந்த இதழினில் ஆகிய திருமுகத்தினைக் கொடுத்தருளினர். (வி-ரை) அதிர்.....பெருமையாலே - இத்திருமுகம் அருளியது பத்திரனார்க்கருளிய அளவன்று; இதனால் சேரர்க்கு அருளியதே பெருமை பெற விளங்கும் என்பது குறிப்பு; ழுஅடியேன் பொருளாத் திருமுகம் கொண்டுÓ (3778); “உம்பர் பெருமா னருள் போற்றிÓ (3779); “அடிமை கொண்டருளும் பான்மையருளின் பெருமையினை நினைந்து பலகாற் பணிந்தேத்திÓ (3786); “வாரம் பெருகத் தமக்கன்று மதுரை யால வாயமர்ந்த, வீர ரளித்த திருமுகத்தால் விரும்பு மன்பின் வணங்குதற்குÓ (3829); “அடியேனைப் பொருளாக அளித்ததிரு முகக்கருணை, முடிவேதென் றறிந்திலேன்Ó (3841) என்பன முதலியவை காண்க. வழியடிமையாகப் பாண்டியனும் சோழனு மிருப்பவும் சேரருக்கு அருளியபெருமையும் குறித்தது. உதியர் - சேரர்; உதியர் வேந்தன் - சேரமான். அருள் செய்த பெருமையாலே - திருமுகம் அருளியதன்றி அதனுள் “பருவக்கொண்மூப் படியென...சேரலன்Ó எனவரும் பொருள்களும் காண்க. செல்வத்துக்கேற்ற இருநிதிகொடுக்க - “மாண் பொருள் கொடுத்துÓ என்ற திருமுகப் பாசுரத்துக்குப் பொருள் விரித்தபடி; கொடையானது கொள்வோர் தகுதியேயன்றிக் கொடுப்போரது செல்வ நிலையினுக்கும் ஏற்றவாறு அமைதல் வேண்டுமென்பது கருத்து. மதிமலிபுரிசை - இது திருமுகப்பாசுரத்தின் தொடக்கம்; முதற்குறிப்பு. தோட்டுத் திருமுகம் - பனை ஓலை யிதழின் வரைந்தெழுதிய திருமுகம்; திருமுகம் - பெரியோர்கள் எழுதும் ஓலைகளுக்கு வழங்கும் உபசார வழக்கு; “சீரரச னுரை தங்கு மோலைதிரு முகமென்று சூடு செயலேÓ (சித்தி. பரபக் - பட்டாசாரியன் மதமறுதலை - 5); தோடு - இதழ். காண - இரவில் கனவில் அருள் செய்ததற்கேற்ப நனவிலும் காணும்படி. மேலுங்கீழுந் தொடர்ந்த ஓர்வகை அறுசீர்விருத்தங்களுள் இப்பாட்டுத் தனிப்படத் திருமுகப் பாசுரத்துக்காக வந்தது போலும்! |
|
|