கேட்ட பொழுதே கைதலைமேற் கொண்டு கிளர்ந்த பேரன்பால் நாட்டம் பொழிநீர் வழிந்திழிய வெழுந்து நடுக்க மிகவெய்தி ஓட்டத் தம்பொன் மாளிகையின் புறத்தி லுருகுஞ் சிந்தையுடன் பாட்டின் றலைமைப் பாணனார் பாதம் பலகாற் பணிகின்றார், | 30 | (இ-ள்) கேட்ட பொழுதே...மிகவெய்தி - அச் செய்தியினைச் சொல்லக் கேட்டபோதே கைகளைத் தலைமேற் கூப்பிக் கிளர்ந்த பேரன்பினாலே கண்களினின்றும் பொழியும் கண்ணீர் வழிந்து கீழே வர எழுந்து மிகவும் நடுங்கி; ஓட்டத்து...புறத்தில் - ஓடவிட்ட அழகிய பொன் பூண்ட திருமாளிகையின் புறத்திற் போந்து; உருகும்...பணிகின்றார் - உருகும் மனத்துடனே பாட்டின் தலைவனாராகிய பாணபத்திரருடைய திருவடிகளைப் பல முறையும் வணங்குகின்றாராய், (வி-ரை) கேட்டபொழுதே - வாயில்காப்போர் சொல்லக் கேட்ட அப்போதே. கண்ணீர் வழிந்திழிதல் - நடுக்க மெய்துதல் - முதலியவை அன்பு மிகுதியிற் காணும் மெய்ப்பாடுகள். இங்குக் கூறியவை, செய்தி கேட்டவுடன் நிகழ்ந்தவை; மேற் பாட்டிற் கூறுபவை கண்டபோது நிகழ்பவை. நாட்டம் பொழிநீர் - கண்ணீர்; நாட்டம் - கண்; நடுக்கம் - உடல் கம்பித்திடுதல்; “திருமேனி தன்னி லசைவும்Ó (2168); “பதைப்பதுஞ் செய்கிலைÓ (திருவா). ஓட்டத்து அம்பொன் மாளிகை - உருக்கி ஓடவிட்ட பொன் ஒளி மிக விளங்கும்; பொன்னால் சிகரமும் பிற வேலைப்பாடுகளும் அமைந்த அரசமாளிகை. புறத்தில் - புறத்திற் போந்து; செய்தி கேட்டவுடன் பாணனாரை உள்ளே வரவழைக்க என்னாது தாமே ஓடி அவரிருக்குமிட நாடி வெளிப்போந்து என்பது அன்பின் பெருக்குக் குறித்தது; “அவரழைக்க வொட்டா தீச னாரன்பர் தம்பா லெய்தினான் வெய்ய வேலான்Ó (பூசலார் - புரா - 13-4183) என்னும் நிலை காண்க. பாட்டின் தலைமை - பாட்டு - கீதம். “இசைப்பாடலிற் பரவும்Ó (3773). தலைமைப் பத்திரனார் தம்மைப் பலகால் - என்பதும் பாடம். |
|
|