சேரர் பெருமா னருள்செய்யத் திருந்து மதிநூன் மந்திரிகள் சாரு மணிமா ளிகையுள்ளாற் றனங்க ளெல்லா நிறைந்தபெருஞ் சீர்கொ ணிதிய மெண்ணிறைந்த வெல்லாம் பொதிசெய் தாளின்மேற் பாரி னெருங்க மிசையேற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள். | 34 | (இ-ள்) சேரர் பெருமான் அருள் செய்ய - சேரமான் பெருமாள் நாயனார் இவ்வாறு அருளிச் செய்தாராக; திருந்து....ஏற்றிக்கொண்டு - திருந்து மதியும் நூலறிவுமுடைய அமைச்சர்கள் சார்ந்த அழகிய மாளிகையினுள் தனங்கள் எல்லாவற்றாலும் நிறைந்த பெரிய சிறப்புடைய அளவற்ற நிதியங்களை எல்லாம் பொதி செய்து ஆளின்மேலே நிலம் நெருங்க ஏற்றிக் கொண்டு; வந்து பணிந்தார்கள் - அரசரிடம் வந்து வணங்கினார்கள். (வி-ரை) திருந்தும் - உலகம் திருத்தும் எனப் பிறவினைப் பொருளில் வந்தது. மதிநூல் - மதிநுட்பமும் நூலறிவும் உடைய. “மதிநுட்ப நூலோ டுடை யார்க்குÓ (குறள்). தனங்கள் எல்லாம் - நிதியம் எண்ணிறந்த - நிதியங்களின் வகையாலும் தொகையாலும் மிகுதி குறித்தன. பாரில் நெருங்க - நிலத்தின் மேல் நெருங்கி வரும்படி. |
|
|