பூசை கடிது முடித் “தடியே னென்னோ பிழைத்த?Ó தெனப்பொருமி “ஆசை யுடம்பான் மற்றினிவே றடையு மின்ப மியா?Ó தென்று தேசின் விளங்கு முடைவாளை யுருவித் திருமார் பினினாட்ட ஈசர் விரைந்து திருச்சிலம்பி னோசை மிகவு மிசைப்பித்தார். | 42 | (இ-ள்) பூசை கடிது முடித்து - பூசையினை விரைவில் முடித்து; அடியேன்......பொருமி - அடியேன் என்ன பிழை செய்தனனோ? என்று துக்கித்து அழுது; ஆசை....என்று ஆசைகொண்டு தாங்கும் இவ்வுடம்பினாலே இனி மற்று அடையும் இன்பம் வேறு யாது? என்று துணிந்து; தேசின்.....நாட்ட - ஒளியுடன் விளங்கும் - உடைவாளை உருவித் தமது திருமார்பினிலே நாட்ட; ஈசர்......இசைப்பித்தார் -இறைவர் மிக விரைவுடனே திருச்சிலம்பின் ஓசையினை அதிகமாக இசைப்பித்தருளினர். (வி-ரை) பூசை கடிது முடித்து - “பூசை முடிவின் கண்Ó என முன்னர்க் கூறியமையால் அஃது சிவபூசைமுறையில் இறைவர்க்குரிய வழிபாட்டு அங்கங்களின் முடிவு என்பதும், இங்கு முடித்து என்றது அவ்வங்கங்களுள் இறைவர் பூசையின் முடிவின்மேற் சிவாகம விதிப்படி செய்ய நின்ற சண்டேசுர பூசையும் பூசை ஒடுக்கமும் முதலாகிய அங்கங்களின் நிறைவு என்பதும் ஆம். அடியேன் என்னோ பிழைத்தது? எனப் பொருமி - பூசையிற் பிழைபடினன்றி, இறைவர், அதனை ஏற்றலும், அதற்கடையாளமாகத் திருச்சிலம்பின் ஒலியளித்தலும் செய்தருளா திராராதலின் பூசையில் என்னால் நேர்ந்த பிழை என்னோ? என்று வருந்திப் பொருமி அழுதனர்; பொருமி - துக்கித்து; அழுது. “ஆசை....யாதுÓ என்று - ஆசை உடம்பு - ஆசைப்பட்டுத் தாங்கித் திரியும் இவ்வுடம்பு; ஆசையாவது இழிவுடைய வஞ்ச வினைக் கொள்கலமாகிய புலாலுடம்பை நன்றென மதித்து மயங்குதல். இனி மற்று அடையும் வேறு இன்பம் யாது? என்க - மற்று -உடம்பாற் செய்யும் பூசையினால் அருள் பெறாத இந்நிலையில் என்றதாம்; வேறு - பூசை செய்து சிலம்பின் ஒலி கேட்கும் இன்பத்தின் வேறாக; உடன் கொண்டு வாழ்வது சிவனைப் பூசித்து அவனருள் பெறும் தூய இன்பம் பெறும் பொருட்டேயாம் என்ற உண்மைநூல்களில் துணிபு கூறியபடி; “ஊன டைந்த உடம்பின் பிறவியே, தான டைந்த உறுதியைச் சாருமால்Ó என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. உடைவாளைத் திருமார்பினின் நாட்ட - இறைவருக்கு ஏற்கும் பூசை செய்யப் பெறாத இவ்வீண் உடம்பு சிதைத்தொழிக்கத் தகுந்ததேயன்றித் தாங்கத் தக்கதன்று என்று துணிந்தார் என்க. உடைவாள், - உடையிற் செருகியுள்ள வாள். ஓசை மிகவும் இசைப்பித்தார் - மிகவும் - முன்போற் கேட்கச் செய்யும் அளவின் மிகுதியாக; இசைப்பித்தார் - இங்குக் கேட்கும்படி ஒலியை உளதாக்கினார் என்பதாம். இசைப்பித்தது இறைவர் செயல்; அதனை நாயனார் கேட்ட நிலை மேற்பாட்டிற் கூறுவார். உடம்பானா மினிவேறு - என்பதும் பாடம். |
|
|