ஆடற் சிலம்பி னொலிகேளா வுடைவா ளகற்றி யங்கைமலர் கூடத் தலைமேற் குவித்தருளிக் கொண்டு விழுந்து தொழுதெழுந்து நீடப் பரவி மொழிகின்றார் “நெடுமால் பிரம னருமறைமுன் தேடற் கரியாய் திருவருள்முன் செய்யா தொழிந்த தென்Óனென்றார். | 43 | (இ-ள்) ஆடல்....அகற்றி - திருக்கூத்தின் சிலம்பொலியினைக் கேட்டு உடைவாளினைப் போக்கி; அங்கைமலர்..மொழிகின்றார் - அழகிய கைமலர்களைச் சேரத்தலைமேற் கூப்பி யருளிக்கொண்டு நிலமுற விழுந்து தொழுதெழுந்து நெடிது துதித்துச் சொல்வாராகி;நெடுமால்..என்றார் - நெடிய விட்டுணுவும் பிரமதேவனும் அருமறைகளும் முன்னே தேடுதற்கு அரியவரே! முன்பு திருவருள் செய்யா தொழிந்த காரண மென்னை? என்றார். (வி-ரை) ஆடற் சிலம்பின் ஒலி - ஆடுதலின் எழுந்த பாதச் சிலம்பின் ஒலி. ளுடைவாள் - தம்மைத் துறக்கும் பொருட்டு மார்பினின் நாட்டிய உடைவாள். குவித்தருளிக் கொண்டு - கூப்பியருளியபடியே. தேடற் கரியாய் - அரியயனும் அருமறையும் தேடியும் காண்டற் கரியவரே! சிறிய யானோ உமது பெருமையை அறிய வல்லவன் என்றவாறு, முன் திருவருள் செய்யா தொழிந்ததென் - என்க; நீ அறிவித்தாலன்றி உயிர்கள் அறியா; ஆதலின் நீயே அறிவித்தருளல் வேண்டும் என்றதாம். இறைவரைக் காரணம் வினவியது தமது பிழையினை அறிந்து நீக்கிக்கொள்ளும் பொருட்டு. |
|
|