என்ற பொழுதி னிறைவர்தா மெதிர்நின் றருளா தெழுமொலியான் “மன்றி னிடைநங் கூத்தாடல் வந்து வணங்கி வன்றொண்டன் ஒன்று முணர்வா னமைப்போற்றி யுரைசேர் பதிகம் பாடுதலால் நின்று கேட்டு வரத்தாழ்த்தோÓ மென்றா ரவரை நினைப்பிப்பார். | 44 | (இ-ள்) என்ற....ஒலியான் - முன் கூறியவாறு சேரர் பெருமான் கேட்ட பொழுது இறைவர் தாம் நேரே தம்முருக் காணக் காட்டியருளாது ஆகாயத்தில் எழும் அசரீரியாகிய ஒலியினாலே; மன்றினிடை....நினைப்பிப்பார் - திருவம் பலத்தி னிடத்திலே நமது ஆனந்தக் கூத்தாடலை வன்றொண்டன் வந்து வணங்கி நம் பால் ஒன்றித்த உணர்வினாலே நம்மைத் துதித்து உரைசேரும் பதிகத்தினைப் பாடுதலால், அதனை நின்று கேட்டபடியினாலே இங்கு வரத் தாழ்த்தோம் என்று, இதன் மூலம் அவரை இவர்பால் நினைவூட்டுவாராய் அருளினார். (வி-ரை) எதிர்நின்றருளாதெழும் ஒலியால் - வெளிப்பட்டு முன்னின்று காட்சிப்பட் டருளாமல் ஆகாயத்தினின்றும் அசரீரியாக எழுகின்ற ஒலியினாலே செவிப் புலப்படும்படி, மன்று - தில்லைத் திருச்சிற்றம்பலம். வந்து - எங்குஞ் சிதம்பரமாயினும் சிறப்பு வகையால் தில்லையம்பலத்தையே குறிக்கும்; யோக நிலையில் எப்போதும் எவ்விடத்தும் இடைவிடாது அகத்தினுள் கண்டு கும்பிட்டிருக்கும் பண்புடையார் ஆளுடைய நம்பிகள்; ஆனால் இங்கு வந்து போற்றி என்றதனால் புறத்திலே அண்ட நிலையில் பல பதிகளையும் சென்று கும்பிட்டுத் தில்லை என்னும் பதியில் வந்து உணர்ந்து துதித்துப் பாடினார் என்றதாம்; “குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே யிருப்பர்Ó (சித்தி - 11- 5); “அந்நிலைமை யிந்நிலையி னடைந்தமுறை யாலே மாய மெலா நீங்கியரன் மலரடிக்கீ ழிருப்பன், மாறாத சிவானுபவ மருவிக் கொண்டேÓ (மேற்படி - 11- 1); “சீவன் முத்தர் சிவமே கண்டிருப்பர்Ó ( 11- 2); ழுமெய்யே கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரேÓ (சிவப்பிரகாசம். 98) என்பனவாதி திருவாக்குக்களிற் கூறும் பண்பு ஆளுடைய நம்பிகள் இவ்வுலகிற் சரித்த நிலையின் பண்பாகும். அந்நிலையின் வேறு பிரித்துணர வந்து என்றார். வன்றொண்டன் - தாமே தடுத்து வலிந்தாட்கொண்ட வரலாறும், பிறவுமாக நம்பிகளது சரிதக் குறிப்புக்களை உணர்த்த இப்பெயராற் கூறினார். ஒன்றும் உணர்வு - ஒன்றுபட்ட; பிரிப்பின்றி அத்துவிதமாகக் கலந்த; “ஒன்றி யிருந்து நினைமின்கள்Ó (தேவா - அரசு.). உரைசேர் பதிகம் பாடுதலால் - உரையுணர் விறந்த சிவானுபவத்தில் மருவி நிற்கும் நிலையினின்றும் பிரிந்து அதனையே சொல்லால் உரைக்கும் நிலையில் நின்று பாடினார் என்பார் உரைசேர் என்றார்; இப்பதிகம் நம்பிகள் திருப்பேரூரை வழிபட்டு இரண்டாம் முறை திருத்தில்லையினை அணைந்து “பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றேÓ என்று பேரூரிற் கண்ட நிலை சிறப்பித்துப் பாடியருளிய “மடித்தாடும்Ó என்ற தொடக்கமுடைய திருப்பதிகம் என்பது கருதப்படும் (3269). நின்று கேட்டு - அப்பதிகத்தினுள்ளே நின்று அதனைக் கேட்டு; நிற்றலாவது அதுவே பொருளாக அதனுள் நிலைத்து விளங்குதல்; நின்ற திருத்தாண்டகத்துள் “நின்றவாறேÓ என்ற கருத்து. இவ்வாறேÓ “பண்ணி னேரு மொழியாளென் றெடுத்துப் பாடப் பயன்றுய்ப்பான், றெண்ணீ ரணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கழு (1533) என்ற கருத்துக்கள் இங்கு வைத்து நினைவு கூர்தற்பாலன; நினைப்பித்தற்கு ஒரு காரணம் கூறும் அளவே இது நின்றதென்க. அவரை நினைப்பிப்பார் - இவ்வாறு காரணங் கூறுதல் அவரை இவருக்கு அறிவுறுத்தி நினைப்பிக்கும் திருவுள்ள அருட்குறிப்பேயாம் அன்றி மற்றில்லை என்பார் நினைப்பிப்பார் என்றார். நினைப்பிப்பார் - என்றார் என்று கூட்டுக. நினைப்பிப்பார் - முற்றெச்சம்; இறைவர் திருவுள்ள மிதுவே என்று இங்கு நாயனார் உணர்ந்தனர் என்பது மேல் “என்னே! அடியார்க் கிவரருளுங் கருணை யிருந்தவாறுÓ என்று கூறுதலால் விளங்கும்; எங்கும் நிறைந்து எல்லாம் ஒருங்கே செய்யவல்லவர் இறைவர் என்பது நாயனார் அறிந்தவரன்றோ? ஆதலின் இவ்வுண்மையினை உணர்ந்தனர் என்க. |
|
|